Presidential Election : குடியரசுத் தலைவர் தேர்தல்: இன்று எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் வாக்களிக்க உள்ளனர்

தில்லி: Indian Presidential Election : இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 62-வது பிரிவின்படி, பதவி விலகும் குடியரசுத் தலைவரின் பதவிக் காலம் முடிவடைவ‌தால் ஏற்படும் காலியிடத்தை நிரப்புவதற்கான தேர்தல், குடியரசு தலைவரின் பதவிக் காலம் முடிவதற்குள் நடத்தி முடிக்க வேண்டும். இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இன்று நடைபெற உள்ள இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் 4,800 எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் வாக்களிக்க உள்ளனர்.

15-வது இந்தியக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க 4,800 எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் (4,800 MPs and MLAs)திங்கள்கிழமை வாக்களிப்பார்கள், எதிர்கட்சி சார்பில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹாவை விட, ஆளும்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவாக 60 சதவீத வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் தேசிய தலைநகர் தில்லி மற்றும் புதுச்சேரி (Delhi and Puducherry) யூனியன் பிரதேசம் உட்பட அனைத்து மாநிலங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டிய வாக்குப்பெட்டிகள் ஏற்கனவே வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

வாக்கை அளிக்க, ஆணையம் குறிப்பிட்ட பேனாக்களை வழங்கும். வாக்குச் சீட்டை ஒப்படைக்கும் போது நியமிக்கப்பட்ட அதிகாரி மூலம் வாக்குச் சாவடியில் உள்ள வாக்காளர்களுக்கு பேனா வழங்கப்படும். வாக்காளர்கள் இந்த குறிப்பிட்ட பேனாவால் மட்டுமே (Only with the specified pen) வாக்குச் சீட்டைக் குறிக்க வேண்டும், வேறு எந்தப் பேனாவையும் கொண்டு அல்ல. வேறு ஏதேனும் பேனாவைப் பயன்படுத்தி வாக்களித்தால் அது செல்லாததாகிவிடும்.

பொதுவாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், மாநில சட்டப் பேரவை உறுப்பினர்கள் (vote in their respective state assembly) அந்தந்த மாநில சட்டப்பேரவையில் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.