Parliament commence today : பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்

தில்லி: Monsoon session : பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது.

இன்று தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 14 நாள்கள் நடைபெற உள்ளது. இதில் 32 மசோதாக்கள் (32 bills) நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் அக்னிபாத், எரிபொருள் விலையுர்வு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கவில்லை. கூட்டத்தில் ஆளும் கட்சி சார்பில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி (Minister Prahalad Joshi) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எதிர்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மல்லிகார்ஜுன் கார்கே, ஜெயராம் ரமேஷ், திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தெலுங்கானா ராஷ்டிர சமீதியைச் சேர்ந்தவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் விதிகளின்படி, நடைமுறையில் உள்ள எல்லா பிரச்னைகளை விவாதிப்பதற்கு அரசு திறந்த மனதுடன் (The government is open to discuss all the issues) இருக்கிறது என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.

ஆனால் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே (Mallikarjun Kharge), 14 நாள்கள் நடைபெற உள்ள‌ நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் 32 மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன. ஆனால் இதைப்பற்றி எந்த தகவலும் எதிர்க்கட்சிகளுக்கு தரவில்லை என்றார்.