Demand action against those involved in violence : வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை

Image Credit : Twitter.

கள்ளக்குறிச்சி: Federation of Tamil Nadu Private Schools Association : வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு இன்று மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரை சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளது.

தமிழ்நாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள கனியாமூரில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி, தற்கொலை என்றும், மர்மமரணம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டம், வன்முறையாக மாறியது.

இதில் தனியார் பள்ளி சூறையாடப்பட்டதோடு, அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பள்ளியின் வாகனங்களுக்கு தீக்கிரையாக்கப்பட்டன. இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் (Chief Minister M. K. Stalin), மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முதல்வரின் அறிவுறுத்தலின்படி உள்துறை செயலாளர், காவல்துறை டிஜிபி (Police DGP) உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டம் நடைபெற்ற பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பள்ளியின் தாளாளர், முதல்வர் (The school principal arrested )ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரம் தொடர்பாக இதுவரை 120 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் கருப்பு பேட்ஜ் அணிந்து சென்று மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரை சந்தித்து, வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை மனு அளிக்க உள்ளது என்று அதன் நிர்வாகி டி.சி.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளி வன்முறையைக் தொடர்ந்து இன்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கம் (Association of Matriculation Schools) வேலை நிறுத்ததை அறிவித்துள்ளன. முன் அனுமதி பெறாமல் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரித்துள்ளது.