BS Yeddyurappa advises Amit Shah : சித்தராமையா பிறந்த நாள் விழாவை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் : அமித் ஷாவுக்கு பி.எஸ்.எடியூரப்பா அறிவுரை

மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் தற்போது இரு திசையை நோக்கி சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் உள்ளனர். அவர்கள் இருவரும் இணைந்து பிரச்சாரம் செய்தால், தேர்தலை சந்திக்க பாஜக வேறு வியூகத்தை வகுக்க வேண்டியிருக்கும் என்று பி.எஸ்.எடியூரப்பா எச்சரித்துள்ளார்.

பெங்களூரு: Don’t take Siddaramaiah’s birthday celebrations lightly : கர்நாடகத்தில் 2023 ஆம் ஆண்டில் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் கனவில் இருந்த பாஜகவுக்கு அண்மையில் தாவணகெரேவில் சித்தராமையாவின் 75 வது பிறந்த நாள் விழா அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த விழாவில் காங்கிரஸ் கட்சியினர் எதிர்பார்த்ததைவிட திரளாக மக்கள் கூடி அக்கட்சியினரை மட்டுமின்றி பாஜகவினரையும் மிரளச் செய்துள்ளது. விழா மேடையில் நடைபெற்ற‌ நிகழ்ச்சிகள், தொண்டர்கள், கூட்டத்தினரின் ஆர்பரிப்பு மற்றும் குதூகலத்தால் பாஜக நிலை குலைந்து போய் உள்ளது. இதனிடையே கர்நாடகத்திற்கு வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலத்தில் உள்ள பாஜக தலைவர்களுக்கு இது குறித்து எச்சரித்துள்ளார். இதனிடையே, மத்திய அமைச்சர் அமித்ஷா, முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின் போது, சித்தராமையாவின் பிறந்த நாள் விழா வெற்றி குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கர்நாடகத்தில் சித்தராமையாவின் 75 வது பிறந்த நாள் விழா (Siddaramaiah’s 75th Birthday Celebration) வெற்றி பெற்றுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவரிடம் காங்கிரஸின் வளர்ச்சி குறித்து பி.எஸ்.எடியூரப்பா பேசி உள்ளார். அவர்கள் இருவரும் சுமார் அரை மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தினர். அமித்ஷாவிம் சித்தராமையாவின் 75 வது பிறந்த நாள் வெற்றி குறித்த அறிக்கையை பி.எஸ். எடியூரப்பா அளித்தார். மேலும் இது தொடர்பாக பி.எஸ்.எடியூரப்பா, அமித் ஷாவுடன் விரிவாக விவாதித்தார். அப்போது சித்தராமையாவின் பிறந்த நாள் வெற்றி விழா குறித்து மாநிலத்தில் ஏற்படப்போகும் மாற்றம் குறித்து அமித்ஷாவிடம், எடியூரப்பா விலாவரியாக பேசியுள்ளார். இதனை பாஜக மேலிடத்தலைவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். அவர்கள் இதனை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் தற்போது இரு துருவங்களாக இருக்கும் சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் உள்ளனர். அவர்கள் இருவரும் இணைந்து பிரச்சாரம் செய்தால், தேர்தலை சந்திக்க பாஜக வேறு வியூகத்தை வகுக்க வேண்டியிருக்கும் (BJP may have to devise a different strategy) என்று பி.எஸ்.எடியூரப்பா எச்சரித்துள்ளார். தாவணகெரெயில் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையாவின் பிறந்த நாள் விழாவிற்கு முதலில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பின்னர் காங்கிரஸ் கட்சியின் மேலிடத்தலைவர்கள் இது தொடர்பாக டி.கே.சிவகுமாரை சமாதானப்படுத்தி உள்ளனர். கட்சித் தலைவர்கள் சமரசத்திற்கு பிறகு தாவணகெரே சென்ற டி.கே.சிவகுமார், ராகுல்காந்தியின் கை சைகையின்படி சித்தராமையாவை ஆழத்தழுவி கட்டிபிடித்து, வாழ்த்து தெரிவித்தார்.

இது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. விழாவிற்கும் அதிக அளவில் கூட்டம் சேர்ந்தது. இதனையடுத்து தற்போது எச்சரித்துக் கொண்டுள்ள பாஜக, அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து, ஆட்சியை பிடிப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதனிடையே தென் கன்னட மாவட்டத்தில் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்டத்தை தடுக்க தவறியதாக, பாஜக கட்சியைச் சேர்ந்தவர்களும், இந்து அமைப்புகளும் ஆளும் கட்சியின் மீது கடும் கோபத்தில் உள்ளது அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவாக கருதப்படுகிறது.