Congress clash in Trichy protest: திருச்சி ஆர்ப்பாட்டத்தில் காங்கிரசார் மோதல்.. பரபரப்பு

சென்னை: Congress clash in Trichy protest: திருச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

நேஷனல் ஹெரால்டு நிறுவன பங்குகளை யங் இந்தியா நிறுவனம் வாங்கியதில் நிதி முறைகேடு நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக யங் இந்தியா நிறுவனத்தின் பங்கு தாரர்களான காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பெற்றது.

இதனிடையே நேஷனல் ஹெரால்டு அலுவலகம் உள்ளிட்ட டெல்லியில் அசோசியேட்டட் ஜர்னல் நிறுவனத்தின் சொத்துக்கள் இருக்கும் இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது.

இந்நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஹவாலா முறையில் பணப் பரிமாற்றங்கள் நடந்ததற்கான ஆதாரங்களை அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது. மும்பை மற்றும் கொல்கத்தாவைச் சேர்ந்த ஹவாலா ஆபரேட்டர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர்.

விசாரணையின் போது, யங் இந்தியன் நிறுவனத்திடம் இருந்து நிதி ஆதாயம் பெறவில்லை எனவும், நிதி தொடர்பான முடிவுகளை மோதிலால் வோரா எடுப்பதாகவும் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கூறியிருந்தனர். ஆனால் தற்போது ஹவாலா பணப் பரி மாற்றத்துக்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால், ராகுல் மற்றும் சோனியா காந்தி அளித்த வாக்குமூலங்களை அமலாக்கத் துறை மறு ஆய்வு செய்து வருகிறது.

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரிடம் மத்திய அமலாக்கத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நேற்று முன்தினம் ஹெரால்டு அலுவலகத்திற்கு அமலாக்கத்துறையினர் சீல் வைத்தனர்.

Also Read: Congress protest over inflation : மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம்

இந்நிலையில், அமலாக்கத்துறை மற்றும் மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் இன்று காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்திலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகர், தெப்பக்குளம் தபால் நிலையம் எதிரே மாவட்டத் தலைவர் ஜவகர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசு கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Also Read: Increase in water flow in Okanekal : தமிழகம் ஒகனேக்கல்லில் நீர் வரத்து அதிகரிப்பு

இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் அலுவலகமான அருணாசசலம் மன்றத்திற்கு நிர்வாகிகள் அனைவரம் வந்தனர். அப்போது மாவட்ட தலைவர் ஜவகர் முன்னிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன் மற்றும் நிர்வாகிகளுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் முற்றி கைகலப்பாக மாறியது.

இதில் இரு தரப்பினரிடையே மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதனால் காங். அலுவலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மோதல் காரணமாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் அங்கு இருந்த காங்கிரஸ் கட்சியினரை வெளியேற்றினர்.

இந்த விவகாரம் தலைமை வரை எடுத்துச்செல்லப்பட்டு சம்பந்தபப்ட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.