Dmk Mp Meet To President: ஆளுநர் விவகாரம்: ஜனாதிபதியை சந்தித்த தமிழக அரசு பிரதிநிதிக்குழு

டெல்லி: தமிழக சட்டசபையின் இந்த ஆண்டிற்கான (Dmk Mp Meet To President) முதல் கூட்டம் கடந்த 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது அரசு தயாரித்து கொடுத்த உரையின் சில பகுதிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி படிப்பதை தவிர்த்தார். இது தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்து பேசினார். ஆளுநர் சட்டசபையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி தேசிய அளவிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சட்டசபையில் ஆளுநர் நடந்து கொண்ட சம்பவத்தை கண்டித்து அவர் மீது ஜனாதிபதியிடம் தி.மு.க. எம்.பி.க்கள் முடிவு செய்தனர். அதன்படி இன்று ஜனாதிபதியை தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் வழங்கினார். அவருடன் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, எம்.பி.ராசா உள்ளிட்டோர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.