CPI: சிக்கமகளூரில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக அசாத் பூங்காவில் 14 ஆவது மாவட்ட மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதற்கு இன்று காலை தமிழ் காலனியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் கொடி பிடித்துக் கொண்டு சிக்கமகளூர் ஆசாத் பூங்காவிற்கு வந்தனர் அங்கு பிரம்மாண்டமான மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
அங்கு தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சித்தன்னகவுடா பாட்டில் பேசுகையில் நூறாண்டு காலமாக ஒரு கட்சி கட்டுக்கோப்பில் உள்ளது என்றால் அது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் அதேபோல ஆர் எஸ் எஸ் சும்ஸ நூறாண்டு காலத்தை கடந்து விட்டது ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விவசாயிகள் ஏழைகள் கட்டிட தொழிலாளர்களுக்கு என பல முறை போராட்டங்களை நடத்தி அவர்களுக்கான நல்ல வழியை முன் கொண்டு சென்றுள்ளது

சுதந்திரம் பெற்று முதலாவது பாராளுமன்றத்தில் ஆரம்பத்தில் 1953 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்த போது எதிர்க்கட்சியாக இருந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் பல மாநிலங்களில் ஆட்சி புரிந்த கட்சி தற்பொழுதும் கேரளாவில் இது ஆட்சி நடத்தி வருகிறது எத்தனையோ பல போராட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு ஏழைகளுக்கு கட்டிட தொழிலாளர்களுக்கு என நிரந்தர போராட்டம் நடத்தி வீடு இல்லாதவர்களுக்கு வீடு பெற்று கொடுத்தும் கட்டிட தொழிலாளர்களுடைய பிரச்சனைகளை தீர்த்து வைத்து நிரந்தரமாக செயல்பட்டு வருகிறது
ஆனால் தற்பொழுது பாரதிய ஜனதா ஆட்சியில் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு பின் சென்று ஏழை எளிய மக்களை கண்டு கொள்ளாமல் அவர்களுக்கு என்ன தேவையோ அதை செய்து அவர்களுக்கு ஜிஎஸ்டி தல்லுபடி செய்து உள்ளது ஆனால் பூ விறப்பவர்கள் சிறிய வியாபாரிகளுக்கு என ஜிஎஸ்டி போட்டு வருகிறது தற்பொழுது மாநிலத்தில் பல்வேறு பிரச்சனைகள் உள்ள நிலையில் தர்மஸ்தலாவில் பெரிய அளவில் அங்கு கற்பழிப்பு கொலை புகார்கள் எழுந்துள்ளது ஆனால் இதற்கு எந்த ஒரு அரசியல் பிரமுகர்களும் பாரதிய ஜனதா கட்சியினரும் சென்று குரல் கொடுப்பது கிடையாது ஆனால் இதே மசூதி அருகேயோ அல்லது சர்ச் அருகே நடந்திருந்தால் தற்பொழுது இதை பூதகரமாக பேசி இருப்பார்கள் கொப்பளாவில் நடந்த இந்து முஸ்லிம் திருமணத்திற்கும் அதையும் ரத்த ஆறாக ஓடும் அளவிற்கு போராட்டம் நடத்தினார்கள் இது ஜாதிவாதியாக நிரந்தரமாக செயல்பட்டு வருகிறது அரசு நம்மை காப்பாற்றுவதற்கு முன் வருவது கிடையாது
அதேபோல மாநில அரசும் 8 மணி நேரம் வேலை செய்து கொண்டிறுந்த நிலையில் மாநில அரசு 12 மணி நேரம் வேலை செய்ய சொல்லுவது எந்த வகையில் நியாயம் தென்னிந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி கால் பதிக்க முடியாத காரணத்தினால் வட இந்தியாவில் பல இடங்களில் சட்டதிட்டத்தை மாற்றி பாராளுமன்ற இடத்தை அதிகரித்து அந்தப் பகுதியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது ஆனால் எதிர்வரும் காலத்தில் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் இந்த முறை பாரதிய ஜனதா கட்சியினர் நிதிஷ்குமார் சந்திரபாபு நாயுடு உதவி இல்லாமல் இருந்திருந்தால் ஆட்சி அமைத்திருக்க முடியாது அவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் ஆட்சியை கவில்ப்பதற்கு அவர்களுக்கு வாய்ப்பு உள்ளது இவ்வாறு நடந்த மாநாட்டில் அவர் பேசினார் மாநாட்டில் மாவட்டத்தைச் சேர்ந்த செயலாளர்கள் நகர செயலாளர்கள் மற்றும் மாநிலத்தைச் சேர்ந்த கட்சி செயலாளர்களும் கலந்து கொண்டனர்



