Brahma Kumaris: சிக்கமகளூர் பிரஜாபிதா பிரம்மகுமாரிகள் அமைப்பு சார்பாக ரக்ஷா பந்தன் இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும் ரக்ஷா பந்தன் பாதுகாப்பு அளிக்கிறது சிக்கமகளூரில் பிரஜாபிதா பிரம்மகுமாரி ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயா தலைமை சகோதரி பாக்கியலட்சுமி நகரில் உள்ள அனைத்து பள்ளிகள் கல்லூரிகள் அரசு அலுவலகங்கள் மாவட்ட கலெக்டர் மாவட்ட சூப்பரெண்டண்ட் போலீஸ் நகரசபை தலைவர் உட்பட பலருக்கும் ராக்கி கட்டினார்
ரக்ஷா பந்தன் நிகழ்ச்சி சுமார் 20 நாட்கல் காலம் அந்த அமைப்பு சார்பாக கொண்டாடப்படுகிறது இதுகுறித்து அவர் பொது மக்களுக்கு கூறுகையில் எத்தனையோ இளைஞர்கள் இளம் பெண்கள் தற்பொழுது உள்ள போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வாழ்க்கையை வீணாக்கிக் கொள்கின்றனர் காரணம் ஒருவருக்கொருவர் மனக்கட்டுப்பாடு இல்லாததும் மற்றும் குடும்ப பாசம் அரவணைப்பு பாச பந்தங்கள் இல்லாததும் அவர்களை தீய வழியில் கொண்டு செல்கின்றது இதனால் வாழ்க்கை துளைத்துக் கொண்டு தற்கொலைக்கும் தூண்டப்படுகின்றனர்

அப்படி செல்பவர்களுக்கு இந்த ரக்ஷாபந்தன் மூலம் ராக்கி கட்டுவதன் மூலம் சகோதரத்துவம் ஒற்றுமை அதிகரித்து அவர்களுடைய தீய பழக்கங்களை கடவுளுக்கு காணிக்கையாக பெற்றுக்கொண்டு நல்ல பழக்கங்களை கற்றுக்கொள்ள விருமாரு பிரம்மகுமாரிகள் அமைப்பு வலியுறுத்துகிறது
கடவுள் சிவனால் ஆசீர்வதிக்கப்படும் ராஜயோகத்தை கற்றுக்கொண்டு அனைவரும் நல்ல வழி படி மன அமைதி சநதோசம் பாதுகாப்பு அதில் கிடைக்கும் சந்தோஷத்தை அனுபவித்து வாழ்வாதாரத்தையும் உடல் நலத்தையும் பாதுகாக்க அனைவரும் ராஜயோகம் கற்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்



