Annamalai Argument With Reporters: செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அண்ணாமலையால் பரபரப்பு

சென்னை: தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை (Annamalai Argument With Reporters) அக்கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினார். அப்போது சென்னை விருகம்பாக்கத்தில் பெண் போலீசாரிடம் தி.மு.க. நிர்வாகி தவறாக நடந்து கொண்ட பின்னர் 2 நாட்கள் வரை வழக்கு பதிவு செய்யாமல் இருக்கும் அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது சட்டம் ஒழுங்கு.

இதன் பின்னால் போலீசார் மீது அழுத்தம் இருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆணையாளர் இதனை தெளிவுபடுத்த வேண்டும் என்றார். அப்போது பெண்களுக்கு எப்போதுமே பாதுகாப்பு இல்லை என்று பா.ஜ.க.வில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் முன்வைத்த குற்றச்சாட்டு பற்றி செய்தியாளர்கள் கேள்வியை முன்வைத்தனர். கட்சியிலிருந்து வெளியேறும் நபர்களை வாழ்த்தி வழியனுப்பேன். என்னை பற்றி விமர்சனம் செய்தால் அவர்களுக்கு எனது மவுனம் மட்டுமே பதிலாக இருக்கும். எங்களை விமர்சனம் செய்பவர்கள் செய்யட்டும் என்று அண்ணாமலை பதிலாக கூறினார்.

அப்போது தொடர்ந்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களை பார்த்து, நீங்க எந்த சேனல்.. என்ற கேள்வியை அண்ணாமலை எழுப்பினார். கட்சி சேனல் நடத்துபவர்கள் எல்லாம் என்னிடம் பேச வேண்டாம். சும்மா நீங்கள் தொலைக்காட்சியில் போட்டால் பயந்துவிடுவோமா என்ற பதிலை கூறினார். இவரது பேச்சால் பத்திரிக்கையாளர்கள் பலர் அதிர்ச்சியடைந்தனர்.