Dmk Should Not Even Dream: ஆதார் இருக்கும்போது மக்கள் ஐ.டி. எதற்காக கொண்டுவர வேண்டும்: அண்ணாமலை

சென்னை: ஆதார் இருக்கும் போது மக்கள் ஐ.டி. (Dmk Should Not Even Dream) எதற்காக கொண்டுவர வேண்டும் என்றும் தனிநாட்டிற்கான அடித்தளம் பற்றி திமுக கனவில் கூட நினைத்து பார்க்கக் கூடாது எனவும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை, தி.நகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாயத்தில் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது அவர் பேசும்போது, விருகம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு பாதுகாப்பு பணிக்காக வந்த பெண் காவலர் மீது தி.மு.க.வினர் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தை ஆளும் தி.மு.க. கடந்த இரண்டு நாட்களுக்கு பின்னர் ஒப்புக் கொண்டுவிட்டது. இது தொடர்பாக காவல் அதிகாரி விவரிக்க வேண்டும்.

மேலும் தி.மு.க. முன்னாள் எம்.பி. மஸ்தான் மறைவு பற்றி விசாரணை நடத்த வேண்டும் என உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தேன். தி.மு.க. அரசு காலத்தில் எம்.பி.க்கே பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது.

பா.ஜ.க.வில் இருந்து யார் வெளியேறினாலும் அவர்களை வாழ்த்தி வழியனுப்பது மட்டுமே எனது பழக்கம். காயத்ரி ரகுராம் தனது கருத்தை கூறுகிறார். மகளிர்கள் அதிகமாக இருக்கின்ற கட்சியாக பா.ஜ.க. உள்ளது. என்னை பற்றி பல குற்றச்சாட்டுகள் வைத்தாலும் என்னுடைய பதில் மவுனம் மட்டுமே. காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.