Cabinet Ministers Meeting: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்

சென்னை: தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் (Cabinet Ministers Meeting) மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வருகின்ற ஜனவரி 9ம் தேதி கூட உள்ள சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்திற்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: நடந்து முடிந்த அமைச்சரவை கூட்டத்தில் தொழில்துறையில் புதிதாக பெறப்பட்டிருக்கும் முதலீடுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், ரூ.15,610.43 கோடி புதிய தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.