BJP is trying to regain power : கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக முயற்சி!

பெங்களுரு : Karnataka Assembly Election-2023: கர்நாடகத்தில் 2023-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க‌ பாஜக அனைத்து முயற்களையும் மேற்கொண்டுள்ளது.

கர்நாடகத்தில் 2018-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக எடியூரப்பா தலைமையிலும், காங்கிரஸ் சித்தராமையா தலைமையிலும், குமாரசாமி, மஜதவும் தேர்தலை சந்தித்தனர். இதில் பாஜக ( BJP) 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மஜத 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. பகுஜன் சமாஜ் கட்சி கேபிஜேபி கட்சி, சுயேச்சை ஆகியோர் தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றனர்.

தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜகவை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்தார். இதனைத் தொடர்ந்து எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சியை பிடித்தது. இதனை எதிர்த்து காங்கிஸ் கட்சி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் எடியூரப்பாவை (B.S. Yediyurappa) பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்ட‌து. பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்பே பாஜக ஆட்சியை இழக்க நேரிட்டது.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ்-மஜத கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. முதல்வராக மஜதவைச் சேர்ந்த எச்.டி.குமாரசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து 14 மாதங்கள் ஆட்சி செய்த குமாரசாமி ( H.D.Kumaraswamy), ஆபரேஷன் கமலா மூலம் 17 எம்எல்ஏக்கள் கூட்டணி ஆட்சிக்கான தங்களது ஆதரவை திரும்பப் பெற்றதையடுத்து, குமாரசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்தது.

இதனைத்தொடர்ந்து அதிக எம் எல் ஏக்களை கொண்டகட்சியான பாஜக மீண்டும் எடியூரப்பா தலைமையில் ஆட்சியை பிடித்தது. ஆனால் அப்போது அவரை முதல்வராக்க பாஜக மேலிடம் தயங்கியது. இதனையடுத்து தில்லி சென்ற எடியூரப்பா அக்கட்சியின் மேலிடத்தலைவரான அமித்ஷா)(Amit shah), பிரதமர் மோடியை சந்தித்து, தான் 2 ஆண்டுகளுக்கு மட்டும் முதல்வராக இருப்பதாக கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து அக்கட்சியின் மேலிடம் அவரை மாநிலத்தின் முதல்வராக்கியது.

2 ஆண்டுகளுக்கு பிறகு எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். இதனைத் தொடர்ந்து பாஜக சார்பில் பசவராஜ் பொம்மையை (Basavaraj Bommai) எடியூரப்பாவின் ஆதரவுடன் கட்சியின் மேலிடம் முதல்வராக்கியது. அவர் எந்த சிக்கலும் சிக்காமல் ஆட்சியை நடத்தி வருகிறார். என்றாலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளால் 2023-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவிற்கு பின்னடைவு ஏற்படும் என ரகசிய அறிக்கை வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மாநிலத்தில் பாஜக ஆட்சியை ஆட்சியை பிடிக்க (BJP is trying to regain power) அனைத்து வகையிலும் பாஜக முயற்சி மேற்கொண்டுள்ளது. 2023-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை (ஜூலை 14) ஆம் தேதி அக்கட்சியின் மாநில பொறுப்பாளர் அருண்சிங் (Arun singh) தலைமையில் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற உள்ளது.

மாநில பாஜக பொறுப்பாளர் அருண்சிங் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை, மாநில பாஜக தலைவர் நளின்குமார் கட்டீல் உள்பட மூத்த அமைச்சர்கள் ஒரு சிலர் மட்டுமே கலந்து கொள்ள உள்ளனர். கூட்டத்தில் 2013-ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் பாஜக ( BJP) ஆட்சியை பிடிக்கத் தேவையான அனைத்து முயற்சிகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கத் தேவையான அனைத்து வழிகளை ஆராயுமாறு அக்கட்சியின் மேலிடத்தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி (PM Modi) வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் முழுவீச்சில் இறங்கி சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்க்கொண்டு வெற்றியை பறிப்பது என பாஜக திட்டமிட்டு செயலில் இறங்கி உள்ளது.