Congress MLA Lakshmi Hebbalkar : காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி ஹெப்பாள்கர், பாஜக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா சந்திப்பால் பரபரப்பு

Lakshmi Hebbalkar : மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருடன் மோதல் போக்கை கொண்டுள்ள லட்சுமி ஹெப்பாள்கர், பாஜகவைச் சேர்ந்த‌ பி.எஸ்.எடியூரப்பாவை சந்தித்ததால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு: Lakshmi Hebbalkar met B.S.Yeddyurappa : அரசியலில் நிரந்தர எதிரிகள் யார் என்றால் யாரையும் குறிப்பிட முடியாது. கர்நாடக அரசியலும் அது போன்றதொரு நிகழ்வு நடைபெற்றுள்ளது செல்வாக்கு மிக்க காங்கிரஸ் தலைவரும், பெலகாம் ஊரக‌ எம்எல்ஏவுமான லட்சுமி ஹெப்பாள்கர், முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பாவை புதன்கிழமை சந்தித்தார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தையும், பரபரப்பையும் கிளப்பியுள்ளது.

பெலகாம் ஊரக‌ எம்எல்ஏ லட்சுமி ஹெப்பால்கர் (Lakshmi Hebbalkar), பெங்களூரில் உள்ள காவிரி இல்லத்தில் முன்னாள் முன்னாள் பி.எஸ்.எடியூரப்பாவை புதன்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பி.எஸ்.எடியூரப்பாவை லட்சுமி ஹெப்பாள்கர் சந்தித்தபோது, ​​லட்சுமி ஹெப்பாள்கருடன் அவரது தம்பியும், சட்டப்பேரவை உறுப்பினருமான சன்னராஜ் ஹட்டிஹோலியும் உடன் இருந்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ லட்சுமி ஹெப்பாள்கர், பி.எஸ்.எடியூரப்பா எங்கள் சமுதாயத்தின் பெரியவர்களில் ஒருவராக பார்க்கிறோம். இதனால் அவரை சந்தித்து ஆசி பெற்றேன். அவருடன் எங்கள் சமுதாயத்தின் வளர்ச்சி குறித்து மட்டும் விவாதித்தேன்.

இது நட்பு ரீதியான சந்திப்பு. அவருடன் அரசியல் பற்றி பேசவில்லை. அரசியலில் மூத்த தலைவர் என்ற முறையில் சில ஆலோசனைகளை அவரிடம் பெற வந்தேன். அதுமட்டுமின்றி பஞ்சமசாலி சமூகத்தினருக்கு 2ஏ இடஒதுக்கீடு குறித்தும் பிஎஸ் எடியூரப்பாவிடம் விவாதித்தேன். முதல்வர் பசவராஜ் பொம்மை திறமையானவர். மற்ற சமூகத்தினருக்கு இடையூறு இல்லாமல் இடஒதுக்கீடு தருவதாக உறுதியளித்துள்ளார். விரைவில் இடஒதுக்கீடு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக பிஎஸ் எடியூரப்பா (B.S.Yeddyurappa) நம்பிக்கை தெரிவித்தார் என்றார்.

ஆனால் லட்சுமி ஹெப்பாள்கர் பி.எஸ்.எடியூரப்பாவை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் தீவிர விவாதத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருடன் மோதல் போக்கை கொண்டுள்ள லட்சுமி ஹெப்பாள்கர், திடீரென பி.எஸ். எடியூரப்பாவை சந்தித்ததால், பாஜக சார்பில் லட்சுமி ஹெப்பாள்கர் போட்டியிடக் கூடும் என்ற விவாதம் எழுந்துள்ளது. நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் பாஜகவின் ரமேஷ் ஜார்கியோளிக்கு எதிராக‌ உள்ள லக்ஷ்மி ஹெப்பாள்கர், எடியூரப்பாவை சந்தித்துள்ளது (Lakshmi Hebbalkar met B.S.Yeddyurappa) பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.