CM Basavaraj bommai : வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்கட்டமைப்பு சீரமைப்பு பணிகளுக்கு ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் பசவராஜ் பொம்மை

உடுப்பி மாவட்டம் மர‌வந்தே கடற்கரையில் கடல் அரிப்பை புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட‌ முதல்வர் பசவராஜ் பொம்மை.

உடுப்பி: Rehabilitation works in flood affected areas : அனைத்து மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்த அறிக்கையின் அடிப்படையில், சாலைகள், பாலங்கள், மின்கம்பங்கள் மற்றும் இதர உள்கட்டமைப்புப் பணிகளைச் சீரமைக்க உடனடியாக ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கர்நாடக முதல்வர் பொம்மை கூறினார்.

கர்நாடக மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உடுப்பி, தட்சிண கன்னடா மற்றும் உத்தர கன்னடா மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்யும் கூட்டத்தில் புதன்கிழமை கலந்து கொண்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட‌ பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்புகளை ஆகஸ்ட் மாதத்தில் நிலைமையை மறுபரிசீலனை செய்து தேவையான நிதி விடுவிக்கப்படும்.

அதிகாரிகள், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர், மாவட்ட நிர்வாகம் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தயாராக உள்ளனர். கடந்த ஆண்டு 14 லட்சம் ஹெக்டேரில் பயிர் இழப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு ஒரு மாதத்திற்குள் ரூ.1,600 கோடி வழங்கப்பட்டது. நிகழாண்டு இழப்பீடு உடனடியாக வழங்கப்படும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்து சேதங்களின் அளவு குறித்த அறிக்கைகளைப் பெற்ற பிறகு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தேவையான உதவியை மத்திய அரசிடம் கேட்போம் (ask help from central government) என்றார்.

மேலும் மைசூரு, தட்சிண கன்னடா, குடகு, உடுப்பி மற்றும் கார்வார் பகுதிகளில் ஜூலை மாதத்தில் கனமழை பெய்துள்ளது. இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர், 5 பேர் காணாமல் போயுள்ளனர், 34 பேர் காயமடைந்துள்ளனர், சுமார் 300 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு குடியமர்த்த‌ப்பட்டுள்ளனர், 14 பராமரிப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன, 4 தேசிய பேரிடர் மீட்புப் படை. மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை மீட்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளன. தட்சிண கன்னடா மாவட்டத்தில் சுமார் 216 ஹெக்டேர்களிலும், உடுப்பி மாவட்டத்தில் (Udipi district) 129 ஹெக்டேர்களிலும் பயிர்கள் நாசமாகியுள்ளன. வீடுகளைப் பொறுத்தவரை, 58 முற்றிலும் சேதமடைந்துள்ளன. 26 வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. 1,062 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

பொதுப்பணித்துறை மற்றும் கிராமப்புற சாலைகள் (Rural roads) உட்பட சுமார் 2,187 கிமீ சாலைகள் சேதமடைந்துள்ளன. இதில் தட்சிண கன்னடாவில் 727 கிமீ, உத்தர கன்னடத்தில் 500 கிமீ, உடுப்பியில் 960 கிமீ.சாலைகள் மழையால் பழுதடைந்துள்ளன. 3 மாவட்டங்களில் சுமார் 5,595 மின்கம்பங்கள் விழுந்து, மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. 422 டிரான்ஸ்பார்மர்கள் பழுதாகி உள்ள‌ன.

தேசிய பேரிடர் இழப்பீடு நிதியின் (NDRF) விதிமுறைகளின்படி வீடு இடிந்து விழுந்தால் உடனடியாக நிவாரணமாக ரூ.3,200 இழப்பீடு வழங்கினாலும், மாநில அரசு அதனை உயர்த்தி ரூ.10 ஆயிரம் வழங்குகிறது. வீடுகளுக்கு ஏற்பட்ட சேதத்தின் அளவைப் பொறுத்து ஏ, பி மற்றும் சி என வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஏ பிரிவில் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு ரூ. 5 லட்சமும், பலத்த‌ சேதமடைந்த பி பிரிவு வீடுகளுக்கு ரூ. 3 லட்சமும், பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும். மத்திய அரசு, ஏ மற்றும் பி பிரிவினருக்கு ரூ.96 ஆயிரமும், சி பிரிவுக்கு ரூ.5 ஆயிரமும் நிர்ணயித்துள்ளது.

பயிர் சேதங்களுக்கு தேசிய பேரிடர் இழப்பீடு நிதி, ஒரு ஹெக்டேருக்கு ரூ.6,800 உள்ளீட்டு மானியமாக நிர்ணயித்துள்ளது, இருப்பினும் மாநில அரசு ரூ.13,600 வழங்குகிறது, அதேபோல இந்த ஆண்டும் ஒரு ஹெக்டேருக்கு மானியமாக ரூ.13,600 வழங்கப்படும். நஞ்சைப் பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு மத்திய அரசு ரூ.13,500 உள்ளீட்டு மானியத்தை நிர்ணயித்துள்ளது. ஆனால் மாநில அரசு ரூ. 25 ஆயிரம் வழங்கிறது. தோட்டக்கலை பயிர்களுக்கு மத்திய அரசு (central government) ரூ.18 ஆயிரம் உள்ளீட்டு மானியம் வழங்குகிறது. மாநில அரசு விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் ரூ.28 ஆயிரம் வழங்குகிறது.

வெள்ளம் ( Flood) போன்ற இயற்கை பேரிடர்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ. 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. ஆனால் மாநில அரசு அதை ரூ. 5 லட்சமாக உயர்த்தியுள்ளது. பராமரிப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களுக்கு முட்டை உள்ளிட்ட சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

குடகு மற்றும் கடலோரப் பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம் (Earthquake) ஏற்படுகிறது. இந்திய புவியியல் ஆய்வு மையம், பெங்களூரு மற்றும் மைசூரு பல்கலைக்கழகங்கள் நில நடுக்கத்திற்கான காரணத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் மக்களின் பாதுகாப்பிற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

குடகில் நிலச்சரிவுக்கான காரணங்களை அமிர்தா பல்கலைக்கழக நிபுணர்கள் குழு ஆய்வு செய்து வருகிறது.தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா (Uttara Kannada) மற்றும் மலைநாடு பகுதிகளிலும் இதேபோன்ற ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அறிக்கை கிடைத்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கடல் அரிப்பை தடுக்கும் திட்டம் ரூ.300 கோடி அளவில் ஆசிய வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டாலும், முடிவுகள் திருப்திகரமாக இல்லை. உள்ளால் கடற்கரையில் ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு ‘சீ வேவ் பிரேக்கர்’ (Sea Wave Breaker) சோதனை அடிப்படையில் முயற்சி மேற்கொள்ளப்படும். இந்த தொழில்நுட்பம் வெற்றி பெற்றால், அதை முழு கடற்கரைக்கும் விரிவுபடுத்தப்படும். அடுத்த 2 அல்லது 3 மாதங்களில் கடல் அரிப்புக்கு நிரந்தர தீர்வு காணும் திட்டம் வகுக்கப்படும் என்றார்.