Rafale Watch Bill: டீக்கடையில் ‘ரபேல் வாட்ச்’ பற்றி பேசுகிறார்களோ அப்போது பில்: அண்ணாமலை அதிரடி

டீக்கடையில் எப்போது ரபேல் வாட்ச் (Rafale Watch Bill) குறித்து பேசுகிறார்களோ அப்போது வாட்சியின் பில்லை வெளியிடுகிறேன் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை அதிரடியான கருத்தை கூறியிருக்கிறார்.

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்தில் ஒரு பேட்டியில், பா.ஜ.க. அண்ணாமலை கட்டியிருக்கும் வாட்சியின் விலை ரூ.4 லட்சம் இருக்கும். அதனை எப்படி அவர் வாங்கினார் என்று சொல்ல வேண்டும், அது பற்றிய பில்லையும் பொது வெளியில் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இவரது பேட்டிக்கு பின்னர் தமிழக அரசியல் களத்தில் ரபேல் வாட்ச் என்றால் என்ற என்ற கேள்வி ஒருபுறம் எழுந்தாலும், முதலமைச்சர் ஸ்டாலின் அவரது மருமகன் சபரீசன் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாரத்திற்கு ஒரு வாட்ச் மாற்றுகிறார்கள், அதன் விலை பல கோடி இருக்கும் என்று பா.ஜ.க. சார்பாக பேசப்பட்டு வருகிறது.

இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று (டிசம்பர் 20) மாலைக்குள் ரபேல் வாட்சியின் பில்லை வெளியிட வேண்டும் என்ற நிபந்தனையை வைத்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோவையில் அண்ணாமலை பேசியதாவது: டீக்கடையில் எப்போது ரபேல் வாட்ச் பற்றி பேசுகிறார்களோ அன்றைய நாள் வாட்சியின் பில்லை வெளியிடுகிறேன். ரபேல் கடிகாரம் பற்றி அனைத்து அமைச்சர்களும் பேச வேண்டும். அப்போதுதான் அவர்களுடைய ஊழல்களை வெளியே கொண்டுவர முடியும். அவர்களின் சொத்து பட்டியலையும் வெளியிட்டு அரசியலில் ஒரு புரட்சியை ஏற்படுத்த முடியும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

முந்தைய செய்தியை பார்க்க:Tamilchemmal Award to 38 Tamil scholars: 38 தமிழறிஞர்களுக்கு தமிழ்ச்செம்மல் விருது

முந்தைய செய்தியை பார்க்க:Kanchipuram AIADMK Protest: காஞ்சிபுரத்தில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்