BJP rule in Tamil Nadu : தமிழகத்தில் பாஜக ஆட்சியை அமர்த்திக் காட்டுவார் அமித்ஷா: கே.அண்ணாமலை

சென்னை: Amit Shah will bring BJP rule in Tamil Nadu: K. Annamalai : தமிழகத்தில் பாஜக ஆட்சியை அமர்த்திக் காட்டுவார் மத்திய அமைச்சர் அமித்ஷா. மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து பிரதமர் மோடியிடம் ஆலோசிக்கவில்லை என்றும், அது குறித்து பேசுவதற்கு இது உகந்த நேரம் அல்ல என்றும் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னைக்கு சனிக்கிழமை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா(Union Home Minister Amit Shah), தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தமிழகம் வந்து சென்றுள்ளதால் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். கடந்த முறையை விட‌ இந்த முறை பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது சமூக வலைதளங்களில் இரு மடங்கு ஆத‌ரவு பெருகி உள்ளது.

மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்த கூட்டத்தில் , தமிழக மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் கட்சி சார்பாக என்ன வேண்டும் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. திண்டுக்கலில் இருந்து மதுரை செல்லும் போதும் ஒரு மணி நேரம் பிரதமரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், எனக்கு 2024 மக்களவைத் தேர்தல் ( 2024 Lok Sabha Elections) மற்றும் கூட்டணி குறித்து பேகவதற்கான நேரம் இது இல்லை என்பதால் அது தொடர்பாக எதுவும் பேசவில்லை.

சட்டப்பேரவை அனைத்துக் கட்சிகளின் கூட்டம் என்ற பெயரில் திமுக சின்னத்தில் வெற்றி பெற்ற கட்சிகள் சிலவற்றை வைத்துதான் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டத்தை சனிக்கிழமை கூட்டியுள்ளார். நலிவடைந்த முற்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீடு விஷ யத்தில் காங்கிரஸ், இடதுசாரிக‌ளுக்கு திமுகவுடன் கருத்து வேறுபாடு உள்ளது. பிரதமர் மோடியை சந்திக்க இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் விருப்பக் கடிதம் (Letter of interest from EPS, OPS to meet PM Modi) கொடுத்ததால் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டது. இருவரிடமும் பிரதமர் மோடி அன்போடு பேசினார்.

பாஜகவை பொருத்தவரை தொண்டர்களால் தேர்வு செய்யப்படும் தலைமையுடன்தான் கூட்டணி வைப்போம் பிரமுகர்களுடன் கூட்டணி இல்லை என்பதை முன்பே தெரிவித்துவிட்டோம். இப்போதைக்கு கட்சியை வலுப்படுத்துவதே பாஜகவின் இலக்கு (BJP’s goal is to strengthen the party). கூட்டணி குறித்து தேர்தல் நெருங்கும்போது பாஜகவின் ஆட்சிமன்றக் குழு முடிவு செய்யும். பாஜகவால் நுழையவே முடியாது எனக் கூறப்பட்ட வட கிழக்கு மாநிலங்களில் பாஜகவை ஆட்சியில் அமர்த்தி காட்டிள்ளார் அமித்ஷா. எனவே, தமிழகமும் அதற்கு விதிவிலக்கு அல்ல என்றார்.