Withdraws red alert in Tamil Nadu : தமிழகத்தில் சிவப்பு எச்சரிக்கை திரும்பப் பெற்றது இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை: India Meteorological Department withdraws red alert in Tamil Nadu : தமிழகத்தில் நிர்வாக காரணங்களுக்காக விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதே நேரம் தமிழ்நாட்டில் கன மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் 16 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தென்மேற்கு வங்கக்கடலில் (southwest Bay of Bengal) உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்ததையடுத்து தமிழகத்தில் கடந்த ஓரிரு தினங் களாக கனமழை பெய்து வருகிறது. வருகிற நவ. 14 ஆம் தேதி (திங்கள்கிழமை) வரை பரவலாக மழை இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வங்கக் கடலில் வருகிற 16 ஆம் தேதி மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் அருகே (Near Andaman) உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் நவம்பர் 14 ஆம் தேதிக்குப் பிறகு மழை படிப்படியாக குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியினால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக கனமழை மற்றும் மிக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் (In Delta districts) விடிய விடிய மழை கொட்டி தீர்த்து இருக்கிறது. இதனால் அந்த மாவட்டங்களில் மக்கள் மழையின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.