Admk Raj satyan Condemnation: கரூரில் காட்டாட்சியா நடக்கிறது? போலீஸ் துணையுடன் அ.தி.மு.க. நிர்வாகி மீது தாக்குதல் நடத்துவதா: ராஜ்சத்யன் கண்டனம்

கரூர்: கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. (Admk Raj satyan Condemnation) நிர்வாகி ஒருவரை போலீசார் துணையுடன் ரவுடிகள் கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியிருப்பதா அக்கட்சியின் மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப செயலாளர் ராஜ்சத்யன் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

கரூரில் நேற்று இரவு அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவின் இணைச்செயலாளர் கே.என்.ஆர்.சிவராஜ் என்பவர் தனது இரண்டு சக்கர வாகனத்தில் சென்றபோது அவரை அடையாளம் தெரியாத சிலர் கழுத்தில் கத்தியை வைத்து காரில் கடத்தி சென்றுள்ளது. அது மட்டுமின்றி காரில் அவரை கொலை செய்வதற்காக பலமாக தாக்கியுள்ளனர். இதில் அவர் உயிருக்கு ஆபத்தான் நிலையில் அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அ.தி.மு.க.வினர் போலீசாருக்கு எதிராகவும் அமைச்சர் செந்தில்பாலாஜியின் அராஜக நடவடிக்கைக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

இந்நிலையில், இது பற்றி மதுரை மண்டல அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ்சத்யன் தனது ட்விட்டர் பதிவில் பாதிக்கப்பட்ட நபர் புகைப்படத்தை பதிவிட்டு கூறியிருப்பதாவது: ஒவ்வொரு வினைக்கும் இணையான எதிர்வினை உண்டு. காலம் வரும். இரு கடத்தல்களின் முக்கிய காரணி அமைச்சர் செந்தில் பாலாஜியும், போலீசும்தான். இது ஊருக்கே தெரியும். இது தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அவருக்கு தெரியுமா? தெரிந்தாலும் நடவடிக்கை எடுப்பாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தியை பார்க்க:Rs 2 Lakh Crore: கை கடிகாரத்தால் ரூ.2 லட்சம் கோடியை வெளியே கொண்டு வருவேன்: தி.மு.க.வை அலறவிடும் அண்ணாமலை

முந்தைய செய்தியை பார்க்க:Allowing Quarries Near Reserve Forests: காப்புக்காடுகளுக்கு அருகில் குவாரிகள் அமைக்க அனுமதிப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்