Saffron Scarf Put On Mgrs Statue: மதுரையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித்துண்டு

மதுரை: உயர்நீதிமன்ற மதுரை கிளை அருகே கே.கே.நகர் உள்ளது. அங்கு (Saffron Scarf Put On Mgrs Statue) அ.தி.மு.க. நிறுவனரும் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் உருவச்சிலை நிறுவப்பட்டிருக்கிறது.

இந்த சிலையை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2001ம் ஆண்டு திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பின்னர் எம்.ஜி.ஆர். சிலை அருகாமையில் ஜெயலலிதாவின் சிலையை அ.தி.மு.க.வினர் நிறுவினர்.

அ.தி.மு.க.வின் இரண்டு தலைவர்களின் சிலைக்கு பிறந்த நாள் மற்றும் மறைந்த நாள் வரும் சமயங்களில் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை அருகே அமைக்கப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆர். திருவுருவ சிலைக்கு மர்ம நபர்கள் திடீரென்று காவித்துண்டு அணிந்துவிட்டு சென்றுள்ளனர். இதனை பார்த்த அ.தி.மு.க. தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதன் பின்னர் சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க.வினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித்துண்டு அணிவித்தது யார் என்று போலீசார் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சிலையில் இருந்த காவித்துணையும் போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் உண்டாகியது.

முந்தைய செய்தியை பார்க்க:Engineer sentenced to 3 years imprisonment: மின் இணைப்புக்கு லஞ்சம்; பொறியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

முந்தைய செய்தியை பார்க்க:Admk Raj satyan Condemnation: கரூரில் காட்டாட்சியா நடக்கிறது? போலீஸ் துணையுடன் அ.தி.மு.க. நிர்வாகி மீது தாக்குதல் நடத்துவதா: ராஜ்சத்யன் கண்டனம்