Vikram S rocket : விக்ரம் எஸ் ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது

ஹைதராபாத்தைச் சேர்ந்த 'ஸ்கைரூட்' எனும் ஏரோஸ் பேஸ் நிறுவனம், தனது ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்துவதற்காக இஸ்ரோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது

Image credit: Twitter.

சென்னை: The Vikram S rocket will be launched tomorrow : இந்திய விண்வெளி வரலாற்றில் முதல்முறையாக, தனியார் புத்தாக்க நிறுவனம் வடிவமைத்த விக்ரம் எஸ் ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வரும் வெள்ளிக்கிழமை (நவ. 18) விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

சதீஷ் தவண் ஏவுதளத்திலிருந்து அன்றைய வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு விக்ரம் எஸ் ராக்கெட் செலுத்தப்படவுள்ளது. உலக அளவில் விண்வெளி வர்த்தகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில், விண்வெளி ஆய்வில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்க இஸ்ரோ முடிவு (ISRO decision to encourage participation of private companies) செய்ததுள்ளது. இதற்காக 2020 ஆம் ஆண்டு ‘ இன்ஸ்பேஸ் ‘ என்ற அமைப்பு நிறுவப்பட்டது. இதன்மூலம் ராக்கெட் செயற்கைக்கோள்களை வடிவமைக்கும் பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி, தெலங்கானா மாநிலம் , ஹைதராபாத்தைச் சேர்ந்த ‘ஸ்கைரூட்’ எனும் ஏரோஸ் பேஸ் நிறுவனம், தனது ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்துவதற்காக இஸ்ரோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. புதிய ராக்கெட் தயாரிப்புப் பணிகளில் ஓராண்டுக்கும் மேலாக ஈடுபட்டு வந்தது. தற்போது வெவ்வேறு எடைகளை சுமந்து செல்லக்கூடிய மூன்று விதமான ராக்கெட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தையான, மறைந்த விஞ்ஞானி விக்ரம் சாராபாய் (Scientist Vikram Sarabhai) நினைவாக விக்ரம் எஸ்’ என்று பெயரிடப்பட் அதில், அதிகபட்சம் 480 கிலேர் சுமந்து எடைடை செல்லக் கூடிய விக்ரம் எஸ் ராக்கெட்டை சோதனை முயற்சியாக விண்ணில் செலுத்துவதற்கு முடிவானது.

அதன்படி கடந்த நவ. 15 ஆம் தேதி ராக்கெட் ஏவுதலுக்கு தயாரான நிலையில், மோசமான வானிலை காரணமாக அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. தற்போது பருவச் சூழல்கள் சாதகமாக இருப்பதால், விக்ரம் எஸ் ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து நாளைக் காலை 11.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட இருப்பதாகவும் (It will be launched tomorrow at 11.30 am from the launch at Sriharikota), அதற்கான இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஸ்கைரூட் நிறுவனம் தெரிவித்துள்ளது . இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் குழு வடிவமைத்த 3 ஆய்வு சாத னங்கள் இந்த ராக்கெட்டுடன் இணைத்து அனுப்பப்படவுள்ளன. அவை புவி மேற்பரப்பில் இருந்து 120 கிமீ தொலைவில் நிலைநிறுத்தப்பட்டு, ஆய்வுப் பணிகளுக்கு பயன்படுத்தப் படவுள்ளன. இதைத் தொடர்ந்து, பல்வேறு தனியார் புத்தாக்க நிறுவனங்கள் தயாரித்த ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தவும் இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.