The elephant chased bus : கேரள அரசு பேருந்தை துரத்திய யானை

கோவை: The elephant chased the Kerala government bus :கேரள அரசு பேருந்தை 8 கி.மீ யானை துரத்திய வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழகம் கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வனப்பகுதியில் கேரள அரசு பேருந்தை வழிவிடாமல், யானை ஒன்று துரத்திச் சென்றுள்ளது. பயணிகள் சிலர் விடியோ எடுத்துள்ளனர். இது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. வால்பாறையை அடுத் துள்ள வனப்பகுதியில் கேரள அரசுப் பேருந்தை ஒன்றை காட்டு யானை 8 கி.மீ. தொலைவு துரத்திச் சென்றது (A wild elephant cheased Kerala government bus 8 km) பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடிக்கு வனப் பகுதி வழியாக செல்ல‌ சாலை ஒன்று உள்ளது. இந்த சாலையில் சாலக்குடியில் இருந்து தமிழக எல்லையான வழுக்குப்பாறை எஸ்டேட் வரை இயக்கப்படும் கேரள அரசுப் பேருந்து (Kerala Government Bus plying up to Vallukkupparai Estate) ஒன்று செவ்வாய்க்கிழமை வந்துள்ளது. இந்தப் பேருந்தை ஓட்டுநர் அம்புஜாக்ஷன் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

Thanks to Twitter.

பேருந்து சோலையாறு மின்நிலை யம் அருகேயுள்ள அம்பலப்பாறை என்ற இடத்தில் செல்லும்போது சாலையின் நடுவே ஒற்றை யானை இருப்பதை ஓட்டு நர் பார்த்தார். பேருந்தை நோக்கி யானை வந்துள்ளது . இதனால் ஓட்டுநர் பேருந்தை பின்னோக்கி செலுத்தி உள்ளார் (He has driven the bus backwards). ஆனாலும் அந்த‌ யானை பேருந்தை விடாமல் துரத்தியபடியே வந்துள்ளது. சரிவான மலைப்பாதை என்பதால் திருப்புவதற்கு வழி இல்லாததால், ஓட்டுநர் தொடர்ந்து 8 கி.மீ. தொலைவு வரை பேருந்தை பின்னோக்கியே ஓட்டி உள்ளார்.

ஆனைக்கயம் என்ற இடத்துக்கு வந்த போது யானை சாலையை விட்டு விலகி (When he came to Anaikkayam, the elephant left the road) வனப் பகுதிக்குள் சென்றுள்ளது. இதனால் சுமார் ஒரு மணிநேரம் மரண பயத்தில் தவித்த பேருந்து ஓட்டுந , பயணிகள் உள்ளிட்டோர் அதன் பிறகு நிம்மதிப் பெருமூச்சுடன் பயணத்தைத் தொடர் துள்ளனர். இந்த சம்பவத்தை பேருந்தில் இருந்த‌ பயணிகள் சிலர் விடியோ எடுத்துள்ளனர். இது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.