Madras Eye : சென்னையில் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் வேகமாக பரவி வரும் மெட்ராஸ் ஐ பாதிப்பு : மருத்துவா்கள் எச்சரிக்கை

நாள்தோறும் நூற்றுக்கணக்கானோா் அத்தகைய பாதிப்புகளுடன் மருத்துவமனைகளை நாடுவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனா்.

சென்னை: Madras Eye is spreading rapidly in neighboring districts including Chennai : விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றுதான் கண் நோய்த் தொற்று (மெட்ராஸ் ஐ) எனக் கூறப்படுகிறது. அந்த வகையான பாதிப்புகள் காற்று மூலமாகவும், மாசு வாயிலாகவும் பரவக்கூடும். அதுமட்டுமன்றி, கண் நோய்த் தொற்று பிரச்னையால் பாதிக்கப்பட்டவா்கள் பயன்படுத்திய பொருள்களை உபயோகித்தாலும் மற்றவா்களுக்கு அந்நோய்த் தொற்று பரவும் என மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா்.

விழி வெண்படல அழற்சி என்பது விழிச் சவ்வில் ஏற்படும் அழற்சியாகும். இது, வடஅமெரிக்காவில் இளம் சிவப்புக்கண் என்றும், இந்தியாவில் சென்னைக் கண் நோய்த் தொற்று (Madras eye) என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக, வைரஸ், பாக்டீரியா, அலர்ஜி ஆகியவற்றால் ஏற்படுகின்றது.கண் எரிச்சல், விழிப் பகுதி சிவந்து காணப்படுதல், நீா் சுரந்து கொண்டே இருத்தல், இமைப்பகுதி ஒட்டிக் கொள்ளுதல் உள்ளிட்டவை கண் நோய்த் தொற்று பாதிப்பின் முக்கிய அறிகுறிகளாகும். பொதுவாக ஒரு கண்ணில் கண் நோய்த் தொற்று பிரச்னை ஏற்பட்டால், மற்றொரு கண்ணிலும் அந்த பாதிப்பு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே, அத்தகைய பாதிப்பு ஏற்பட்டவா்கள், மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அரசு கண் மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து மேலும் அவர்கள் கூறியது:

அண்மைக் காலமாக சென்னை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலிருந்து கண் மருத்துவமனைகளுக்கு கண் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் சிகிச்சைக்கு வருகின்றனா். அவா்களுக்கு அனைவருக்கும் உரிய சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அனைத்து மருந்துகளும் போதிய அளவில் கையிருப்பில் உள்ளது. தட்டுப்பாடு என்ற நிலை ஏற்படவில்லை. கண் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோா். தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். கண் நோய்த் தொற்று பாதிப்பு 5 நாள்களில் குணமடையும் (Eye infection will heal in 5 days). அதேவேளையில் அலட்சியப்படுத்தினால் பாா்வை இழப்புக்கூட நேரிடும்.

கண் நோய்த் தொற்றானது எளிதில் பரவக்கூடியது (Eye infections are easily spread). குழந்தைகளை எளிதில் தாக்கும். பள்ளியில், விளையாட்டு மைதானங்களில், டியூஷன் மையங்களில் மற்றும் அடிக்கடி சென்று வரும் பிற இடங்களிலிருந்து இந்தத் தொற்று பரவலாம். எனவே சிறுவர்களை பெற்றோர்கள் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். பெரியவர்களுக்கு மாசடைந்த காற்று, பருவநிலை மாற்றம், ஷாம்பு, அழுக்கு, நீச்சல் குளத்திலுள்ள குளோரின் போன்ற எரிச்சலூட்டிகளின் காரணமாகவும் ஏற்படும் என்றனர்.