Ten people drowned : விநாயகர் சிலைகள் கரைப்பின் போது 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

தில்லி: Ten people drowned : விநாயகர் சிலைகளை விசர்ஜனத்தின் போது தண்ணீரில் மூழ்கி 10 பேர் உயிரிழந்தனர். ஹரியானாவின் இரண்டு பகுதிகளிலும் உத்தரபிரதேசத்தில் ஒரு சம்பவத்திலும் இந்த சோகம் நிகழ்ந்ததாக உள்ளூர் போலீசார் தெரிவித்தனர். ஹரியானாவின் சோனிபட்டில் 3 பேரும், ஹரியானாவின் மகேந்திரகரில் 4 பேரும் உயிரிழந்தனர். உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் 3 பேர் உயிரிழந்தனர்.

கரோனா காரணமாக நாடு முழுவதும் இரண்டு ஆண்டுகளாக விநாயகர் திருவிழா, கொண்டாட்டங்கள் (Ganesha festival, celebrations) நடைபெறாமல் இருந்தது. ஆனால் கரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து வருவதையடுத்து, நிகழாண்டு மீண்டும் விநாயகர் திருவிழா, கொண்டாட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளது. இரண்டு, மூன்று ஆண்டுகளாக விழா கொண்டாடாமல் இருந்த நிலையில், இம்முறை விநாயகர் சதுர்த்தி விழா பல்வேறு இடங்களில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. விழாவின்போது சில விரும்பத்தகாத சம்பவங்களும் நடந்துள்ளன.

விநாயகர் சதுர்த்தி தினமான ஆகஸ்ட் 31ஆம் தேதி ஹரியானாவின் சோனிபட் மற்றும் மகேந்திரகர் (Sonipat and Mahendragarh of Haryana) ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து கொண்டாடப்பட்டன‌. 10 நாட்கள் நடந்த திருவிழா வெள்ளிக்கிழமை பிரியா விடையுடன் நிறைவடைந்தது. மறுபுறம், சோனிபட்டில் உள்ள மிமர்பூர் காட் பகுதியில் தனது மகன் மற்றும் மருமகனுடன் விநாயகர் சிலையை விசர்ஜனம் செய்ய‌ சென்ற ஒருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். தற்போது, ​​இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இதேபோல், மகேந்திரகரில், கனினா – ரேவாரி சாலையில் ஜகடோலி கிராமம் அருகே உள்ள கால்வாயில் விநாயகர் சிலை கரைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 9 க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதில் உடல் நசுங்கி 4 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்திய ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் (Haryana Chief Minister Manohar Lal Khattar), இந்த இக்கட்டான நேரத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருடன் நாங்கள் அனைவரும் நிற்கிறோம் என்றார். தேசியப் பேரிடர் மீட்பு குழுவினர் (NDRF) பலரை மீட்டுள்ளனர் என்றார். மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் விநாயகர் சிலையை கங்கையில் கரைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 3 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர் (3 children drowned in river Ganga). இவர்கள் வெள்ளிக்கிழமை விநாயகர் சிலையை விசர்ஜனம் செய்ய‌ சென்றபோது கங்கை நதியில் தவறி விழுந்தனர். இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மற்றொரு சிறுவன் மருத்துவமனையில் உயிரிழந்தார்.