Grievance camp for Ration card: நாமக்கல் மாவட்டத்தில் இன்று குடும்ப அட்டைக்கான குறைதீர்வு முகாம்

நாமக்கல்: Grievance camp for Ration card today in Namakkal district. நாமக்கல் மாவட்டத்தில் இன்று (10ம் தேதி) குடும்ப அட்டைக்கான குறைதீர்வு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) மல்லிகா வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், கைபேசி எண் பதிவு மற்றும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன்படி மேற்கொள்ள பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், குடும்ப அட்டையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம் இன்று 10.09.2022-ஆம் தேதி காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறுகிறது.

1)நாமக்கல், 2)இராசிபுரம், 3)மோகனூர், 4)சேந்தமங்கலம், 5)கொல்லிமலை, 6)திருச்செங்கோடு, 7)பரமத்தி வேலூர் மற்றும் 8)குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.

எனவே, பொதுமக்கள் மேற்படி குறைதீர்க்கும் நாள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 தொடர்பான தங்கள் குறைகளை தீர்வு செய்து கொள்வதற்கு இம்முகாமினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் குறைதீர் முகாமில் கொரோனா முன்னெச்சரிக்கை அறிவுரைகளை தவறாமல் கடைபிடிக்குமாறும், அதாவது முகக்கவசம், சமூக இடைவெளி மற்றும் கிருமி நாசினி பயன்படுத்துதலை கடைபிடிக்குமாறும் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) க.ரா.மல்லிகா தெரிவித்துள்ளார்.