Teacher Dharna Students House: வறுமையால் சிறுவனை பள்ளிக்கு அனுப்ப மறுப்பு: மாணவன் வீட்டின் முன்பு ஆசிரியர் தர்ணா

தெலங்கானா: தெலங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம், (Teacher Dharna Students House) பெஜ்ஜிங்கி என்ற உயர்நிலைப் பள்ளியில் 64 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அதில் வருகின்ற மார்ச் மாதம் 6 மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கின்றனர். இவர்களில் நவீன் என்கின்ற மாணவன் கடந்த 10 நாட்களாக பள்ளிக்கு வராமல் இருந்துள்ளார்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் உத்தரவின்படி, ஆங்கில ஆசிரியர் பிரவீன் குமார், நவீன் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது அவர்களின் குடும்பம் மிகவும் வறுமையில் இருப்பது தெரியவந்தது. இதன் காரணமாகவே மாணவன் நவீனை பள்ளிக்கு அனுப்புவதற்கு அவர்களின் பெற்றோர் மறுத்துள்ளனர்.

ஆசிரியர் கெஞ்சிக் கேட்டுள்ளார், பள்ளிக்கு தயவு செய்து அனுப்பி வையுங்கள் என்று ஆனால் பெற்றோர் கேட்க மறுத்துவிட்டனர். இதனால் மாணவனின் வீட்டு முன்பு தரையில் அமர்ந்து ஆசிரியர் பிரவீன் குமார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது மாணவன் பெற்றோரிடம் ஆசிரியர் பேசும்போது, உங்களின் வறுமை நிரந்தரமாக போக வேண்டும் என்றால் நவீனை பள்ளிக்கு அனுப்புங்கள் என்றும், கல்வியின் மகத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை அனைத்து கேட்டுக்ககொண்ட பெற்றோர், மாணவன் நவீனை பள்ளிக்கு அனுப்புவதற்கு ஒப்புக்கொண்டனர்.

ஒரு வழியாக மாணவன் நவீனை பள்ளிக்கு அழைத்து வந்த ஆசிரியர் பிரவீன் குமாரை தலைமை ஆசிரியர் மட்டுமின்றி கல்வி அதிகாரிகளும் பாராட்டியுள்ளனர். வறுமையில் சிக்கித்தவித்து வந்த குடும்பத்தில் கல்வியின் மகத்துவத்தை உணர வைத்த ஆசிரியருக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

முந்தைய செய்தியை பார்க்க:OPS Munnetra Kazhagam: ஓ.பி.எஸ் முன்னேற்ற கழகம் என்ற கட்சி ஆரம்பிக்கலாம்: ஜெயக்குமார்

முந்தைய செய்தியை பார்க்க:Garbage dumped near Thiruvarur District Collectorate: திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகாமையில் கொட்டப்படும் கழிவுகள்