Pakistan Cricket Board President: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் திடீர் நீக்கம்

கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக (Pakistan Cricket Board President) கடந்த ஆண்டு ரமீஸ் ராஜா நியமனம் செய்யப்பட்டார். பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்த அணி பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை 3-0 என்று கைப்பற்றியது. இதன் காரணமாக பாகிஸ்தான் கடும் விமர்சனத்திற்கு ஆளாக்கப்பட்டது.

இந்நிலையில், இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்த காரணத்தினால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது பதவிக்கு நஜாம் சேத்தி என்பவரை பாகிஸ்தான் அரசு நியமித்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி: வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதில் சட்டோகிராமில் நடைபெற்ற முதலாவது டெஸ்டில் இந்தியா 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இந்நிலையில், இந்தியா வங்காளதேசம் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்காவில் இன்று (டிசம்பர் 22) நடைபெறுகிறது. அதன்படி இதற்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி வங்காளதேச அணி முதலில் விளையாடுகிறது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தியை பார்க்க:Teacher Dharna Students House: வறுமையால் சிறுவனை பள்ளிக்கு அனுப்ப மறுப்பு: மாணவன் வீட்டின் முன்பு ஆசிரியர் தர்ணா

முந்தைய செய்தியை பார்க்க:Vaikom Vijayalakshmi Interview: மீண்டும் திருமணம் என்றாலே பயமாக உள்ளது: பாடகி வைக்கம் விஜயலட்சுமி