Tamil Nadu Chief Minister M. K. Stalin : பிரதமரிடம் ஜிஎஸ்டி நிலுவையை வழங்க தமிழக முதல்வர் வலியுறுத்தல்

தில்லி: Tamil Nadu Chief Minister M. K. Stalin met Prime Minister Narendra Modi : பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ. 2,493 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்க வேண்டுமென வலியுறுத்தினார்.

தில்லியில் புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை (Prime Minister Narendra Modi) சந்தித்த தமிழக முதல்வர் மு.க. டாலின், அவருக்கு பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து கொடுத்து, தமிழக மரபு தானியங்களை வழங்கினார். பின்னர் அவருடன் கலந்துரையாடினார். அப்போது, 44 வது ஒலிம்பியாட் போட்டிகளை தொடக்கி வைத்ததற்கு நன்று தெரிவித்துக் கொண்டார். அந்த போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது குறித்தும் தெரிவித்தார். நிதி ஆயோக் கூட்டத்திற்கு வர முடியாததற்கான காரணத்தையும் தெரிவித்தார்.

மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் (Chief Minister M. K. Stalin) ஏற்கெனவே அளித்த கோரிக்கைகள் குறித்து பேசியதோடு, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதிகளை விரைவாகவும் வழங்கவும் கேட்டுக் கொண்டார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளோடு, ரூ. 2,493 கோடி ஜிஎஸ்டி நிலுவை தொகையையும் விரைவாக வழங்குமாறு கேட்டுக் கொண்டார். தமிழகத்தில் அடுத்த மாதங்களில் பருவமழை தொடங்கும் போது, தமிழக அரசின் நடவடிக்கைக்கு தேவையான பேரிடர் நிவாரண நிதியை விரைவாக விடுவிக்க‌வும் வலியுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியது: குடியரசு தலைவர் (President), துணைத் தலைவர் ஆகியோரின் பதவி ஏற்பு விழாக்களுக்கு அழைப்பு வந்தது. ஆனால், அவற்றில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. தற்போது அவர்கள் இருவரையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளேன். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு 3 முறை பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து, தமிழகத்திற்கு தேவையான பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்திருந்தேன். அவற்றில் சிலதை நிறைவேற்றக் கூடிய சூழ்நிலையில் இருந்தாலும், பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட சூழ்நிலையில் உள்ளன. அவற்றை நினைவூட்டி, அந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினேன். குறிப்பாக நீட் பிரச்னை, தேசியக் கல்விக் கொள்கை, மின்சார திருத்தச் சட்டம், காவிரி, மேக்கேதாட்டு அணை தொடர்பான கோரிக்கைகளை மீண்டும் பிரதமரிடம் நினைவு படுத்தினேன் என்றார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய தமிழக மரபு தானியங்கள் (Traditional grains of Tamil Nadu) அடங்கிய தொகுப்பு பெட்டகத்தில், மாப்பிள்ளை சம்பா, குள்ளக்கார், கருப்புக் கவுனி, சீரகச் சம்பா, குடவாழை போன்ற அரசி வகைகளோடு, கம்பு, வரகு, சாமை, தினை, கேழ்வரகு போன்ற தானியங்கள் இருந்தன.

முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின், குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் (Vice President Jagadeep Dhankar), குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஆகியோரை சந்தித்து, பொன்னாடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அவருடன் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, முதல்வரின் செயலாளர் உதயசந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் தில்லி டிடியு மார்கில் உள்ள திமுக கட்சி அலுவலகமான அண்ணா-கலைஞர் அறிவாலயத்திற்கு சென்றார். தில்லியில் முதல்வரின் தன் கதை தொகுப்பின் ஆங்கில மொழியாக்கத்தை தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி வழங்கினார்.