Gotabaya Rajapatse : ஆக. 24 இல் இலங்கை திரும்புகிறார் அந்நாட்டின் முன்னாள் குடியரசு தலைவர் கோத்தபய ராஜபட்சே

கொழும்பு: Former President Gotabaya Rajapatse returns to Sri Lanka on the Aug. 24th : நாட்டை விட்டு தப்பிச் சென்ற முன்னாள் குடியரசு தலைவர் கோத்தபய ராஜபட்சே ஆக. 24 இல் இலங்கைக்கு திரும்பி வருவதாக அவரது உறவினரும், முன்னாள் ரஷ்யாவிற்கான‌ இலங்கை தூதராக இருந்த‌ உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து புதன்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: நாட்டை விட்டுச் சென்ற இலங்கையின் முன்னாள் குடியரசு தலைவர் கோத்தபய ராஜபட்சே, ஆக. 24 ஆம் தேதி திரும்பி இலங்கைக்கு வருவதாக தன்னிடம் தொலைபேசியில் தெரிவித்ததாக (Informed on the phone) அவர் கூறியுள்ளார். கோத்தபய ராஜபட்சே இலங்கை திரும்ப உள்ளார் என்று கூறப்படுவதால் மீண்டும் அந்த நாட்டில் போராட்டம் வெடிக்குமா என்ற அச்சத்தில் அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் உள்ளனர்.

பொருளாதார நெருக்கடிக்கு எதிரான தீவிர எதிர்ப்புகளுக்கு மத்தியில் கோத்தபய ராஜபட்சே ஜூலை 13 தேதியன்று இலங்கையை விட்டு வெளியேறினார் ). எதிர்ப்பாளர்கள் அவரது அதிபர் மாளிகைக்குள் நுழைந்து, அவரை நாட்டை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தினர். இதனையடுத்து முதலில் மாலத்தீவிற்கு சென்ற‌ அவர், பின்னர் சமூக வருகை விசாவில் சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூரில் இருந்து இலங்கையின் அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் (He resigned as President of Sri Lanka from Singapore). பதவி நீக்கம் செய்யப்பட்ட குடியரசு தலைவரின் கொள்கைகளால் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடிகளின் பிடியில் இலங்கை இன்னமும் உள்ளது. 5.7 மில்லியன் மக்களுக்கு “உடனடி மனிதாபிமான உதவி தேவை” என்று எச்சரித்த ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்களின்படி, உணவு, பெட்ரோல் மற்றும் மருந்துகள் போன்ற தேவைகளின் கடுமையான பற்றாக்குறையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்சே மற்றும் பசில் ராஜபட்சேவுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை செப்டம்பர் 5 ஆம் தேதி வரை நீட்டித்து இலங்கை உச்ச நீதிமன்றம் (Supreme Court of Sri Lanka) உத்தரவிட்டது. வெகுஜன அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு மத்தியில் ஜூலை மாதம் இலங்கையை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் இருந்த கோத்தபய‌ ராஜபட்சே, சிங்கப்பூர் விசா காலாவதியானதால் தாய்லாந்தில் தஞ்சம் புகுந்துள்ளார்.

தாய்லாந்து (Thailand) பிரதமர், மனிதாபிமான காரணங்களுக்காக 73 வயதான இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபட்சே தாய்லாந்திற்கு தற்காலிக தங்கச் செய்துள்ளதை உறுதிப்படுத்தி உள்ளார் மேலும் வேறொரு நாட்டில் நிரந்தர புகலிடம் தேடும் போது தாய்லாந்தில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள மாட்டேன் என்றும் அவர் உறுதியளித்தாக தெரிவித்துள்ளார். இலங்கையின் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் கோத்த‌பய ராஜபட்சே தனது சமூக வருகை விசா காலாவதியானதை அடுத்து சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு தாய்லாந்து சென்றுள்ளார்.

இது ஒரு மனிதாபிமான அடிப்படையில் கோத்தபய ராஜபட்சே தற்காலிக தங்க வாய்ப்பு அளித்துள்ளோம். எந்தவொரு அரசியல் நடவடிக்கைகளும் இங்கு அனுமதிக்கப்படாது, இது அவருக்கு தஞ்சம் புகுவதற்கு உதவி புரிந்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளதாக பாங்காக் போஸ்ட் (Bangkok Post) செய்தித்தாள் தெரிவித்துள்ளது. தற்போது தஞ்சம் புகுந்துள்ள கோத்தபய ராஜபட்சே தாய்லாந்தில் 90 நாட்கள் தங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் மீண்டும் இலங்கைக்கு திரும்ப உள்ளார் என்ற செய்தியால் அந்நாட்டில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.