presidential candidate Draupadi Murmu : குடியரசு தலைவர் தேர்தல் வேட்பாளர் திரௌபதி முர்மு ஜூலை 2-ல் புதுச்சேரி வருகை

presidential candidate Draupadi Murmu Arriving Puducherry On July 2nd

புதுச்சேரி: presidential candidate Draupadi Murmu : குடியரசு தலைவர் தேர்தல் வேட்பாளர் திரௌபதி முர்மு ஜூலை 2-ல் புதுச்சேரி வருகை புரிந்து கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த திரௌபதி முர்மு, ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார். இதனைத் தொடர்ந்து திரௌபதிமுர்மு கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அவர் ஜூலை 2-ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்திற்கு வருகை புரிந்து தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களிடம் ஆதரவு திரட்டுகிறார்.

புதுச்சேரி தனியார் சொகுசு உணவகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி கூட்டத்தில் பங்கேற்று, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், என் ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக தலைவர்கள் சந்தித்து ஆதரவு திர‌ட்ட உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை அம்மாநில பாஜக தலைவர் சாமிநாதன் செய்து வருகிறார்.

must read : தென்கன்னடம் மாவட்டத்தில் கன மழை : படீல்-மங்களூரு ரயில் நிலையத்தின் இடையே பாதையில் மலைமண் சரிவு

must read : Murder for a kiss : முத்தத்திற்காக நடந்த‌ ஒரு வித்தியாசமான கொலை

presidential candidate Draupadi Murmu Arriving Puducherry On July 2nd