Heavy rain in Mangalore: தென்கன்னடம் மாவட்டத்தில் கன மழை : படீல்-மங்களூரு ரயில் நிலையத்தின் இடையே பாதையில் மலைமண் சரிவு

Heavy rain in Mangalor

மங்களூரு: Heavy rain in Mangalore: தென்கன்னடம், உடுப்பி, வட கன்னடம் மாவட்டங்களில் கன மழை பெய்ததால், படீல்-மங்களூரு ரயில் நிலையத்தின் இடையே தண்டவாளத்தில் மலைமண் சரிவு ஏற்பட்டுள்ளதால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தென்கன்னடம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலை முதல் கனமழை கொட்டியதால் மங்களூரு மாநகரின் புறநகர் பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சி அளித்தது மங்களூரில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள் அங்கங்கே சாலைகளில் நிறுத்தியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மழையால் சில தனியார் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மங்களூரின் அடையாறில் இருந்து கண்ணூர் செல்லும் நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் வாகனங்களில் செல்லமுடியாத நிலைமை ஏற்பட்டது. கண்ணூரில் உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்திலும் தண்ணீர் புகுந்தது.

மங்களூரில் இருந்து மூடபித்ரி செல்லும் சாலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது தேசிய நெடுஞ்சாலையின் அருகே குல்சேகர், குடுப்பு முதல் சக்திநகர் வரையிலான போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. மழையால் பொதுமக்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக எங்கும் செல்ல முடியாமல் சிக்கித் தவித்தனர்.

கோட்டாரா சௌக்கி மற்றும் நகரின் பல பகுதிகளில் கன‌மழை காரணமாக சாலைகளில் குறுக்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது .இந்த மழை வெள்ளிக்கிழமையும் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை நீடித்தால் விடுமுறை அளிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதேபோல் தென்கன்னடம் மாவட்டம் பெல்தங்கடி, சுள்ளியா, மூடபித்ரி, முல்கி பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நேத்ராவதி குமாரதாரா பால்குனி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

உடுப்பி மாவட்டத்திலும் வியாழக்கிழமை கனமழை பெய்தது. மாவட்டத்திலுள்ள காப்பு கார்க்கலா பிரம்மாவர் ,பைந்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. உத்தரகன்னடம் மாவட்டம் முருடேஸ்வர், கார்வார் பகுதிகளிலும் வியாழக்கிழமை ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டிருந்தது. காலை முதல் மாலை வரை கனமழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

கனமழையைத் தொடர்ந்து மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. அரபி கடலில் அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது. தென்கன்னடம் மாவட்டம் படீல்-மங்களூரு ரயில் நிலையத்தின் இடையே தண்டவாளத்தில் மலைமண் சரிவு ஏற்பட்டுள்ளதால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

must read : மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி: முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் உத்தவ் தாக்கரே

must read : 777 Charlie Movie : ஹிந்தியில் வெளியாகுமா “777 சார்லி” ? ரக்ஷித்தின் திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு

Heavy rain in Mangalore