PM Narendra Modi : தேசியக் கொடியை 3 நாள் வீடுகளில் ஏற்றுமாறு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு

ஆக. 13 முதல் 15ம் தேதி வரை 3 நாள்கள் அனைவரது வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றுங்கள்

தில்லி: Hoisting national flag at homes for 3 days : நாட்டு மக்கள் அனைவரும் தங்களின் வீடுகளில் ஆக. 13 முதல் 15ம் தேதி வரை தேசியக் கொடியை ஏற்றுமாறு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை (75th Independence Day) நிகழாண்டு ஆக. 15-ம் தேதி கொண்டாடும் விதமாக, மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது. அதில் ஒரு நிகழ்ச்சியாக அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்றும் நிகழ்ச்சிக்கும் மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

இந்நிலையில், சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது சுட்டுரைப் (Twitter) பக்கத்தில் பதிவிட்டுள்ள‌ பதிவில், நிகழாண்டு நாம் சுதந்திர தினத்தின் 75-வது ஆண்டு விழா நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

அதன் ஒரு நிகழ்ச்சியாக‌ ஆக. 13 முதல் 15ம் தேதி வரை (From 13th to 15th) 3 நாள்கள் அனைவரது வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றுங்கள். இந்த இயக்கம் தேசியக் கொடியுடனான நமது இணைப்பை மேலும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.

75-வது சுதந்திர தினத்தையொட்டி மத்திய அரசு ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ (azadi ka amrit mahotsav) என்ற பெயரில் நடத்த‌ மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. நிகழாண்டு சுதந்திர தினத்தின் 75-வது ஆண்டு என்பதால் இதனை மிகச் சிறப்பாக கொண்டாடுவது என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு உள்ளது.