Jail sentence canceled : மாமியார் மன்னித்ததால் மருமகனின் சிறை தண்டனை ரத்து : உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: Due to mother-in-law’s forgiveness : கடன் பிரச்சினையில் மாமியாரை கொலை செய்ய முயன்ற வழக்கில் மருமகனுக்கு வழக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.

சேலம் ஆத்தூரை சேர்ந்தவர் சிவசுப்பிரமணி. இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி (28th December) இவரது வீட்டில் வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திர‌மடைந்த சுப்பிரமணி வீட்டில் இருந்த அரிவாள்மனையை எடுத்து மாமியாரின் முதுகில் வெட்டியுள்ளார்.

இதையடுத்து, மாமியார் கொடுத்த புகாரின் பேரில் சுப்பிரமணி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சேலம் மகளிர் நீதிமன்றம் (Women’s Court) சுப்பிரமணிக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து கடந்த மே 25ம் தேதி தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்பிரமணி உயர் நீதிமன்றத்தில் (High Court) மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சுப்பிரமணி சார்பில் வழக்கறிஞர் பாலாஜி ஆஜராகி, மனுதாரரும் அவரது மாமியாரும் சமாதானமாகியுள்ளனர். எனவே, மனுதாரரை விடுதலை செய்ய வேண்டும். மாமியாரும், மனுதாரரின் மனைவியும் குழந்தைகளும் நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர் என்றார்.

அப்போது, நீதிமன்றத்தில் மனுதாரரின் மாமியார், மனைவி மற்றும் 3 குழந்தைகள் ஆஜராகினர். தனது மகள் மருமகனுடன் வாழ வேண்டும். குழந்தைகளை வளர்க்க வேண்டும். எங்களுக்குள் சமாதானமாகிவிட்டது. மருமகனை மன்னித்து விட்டேன் (I have forgiven my son-in-law). அவரை விடுதலை செய்யுங்கள் என்று மாமியார் மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில் , “கணவருக்கும் மனைவிக்கும் இடையே ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பதில் உயர் நீதிமன்றம் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தலாம் என்று ஜோஷி என்பவர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் (Supreme Court) தெரிவித்துள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட பிறகும் உயர் நீதிமன்றம் குடும்ப பிரச்சினையில் அதிகாரத்தை பயன்படுத்தலாம். இந்த வழக்கில் கொலை முயற்சி மற்றும் கொடும் காயம் விளைவித்தல் பிரிவில் மனுதாரருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் குற்றம் நடந்துள்ளது. கணவருக்கும் மனைவிக்கும் இடையே இருந்த பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது. எனவே, உயர் நீதிமன்றத்திற்கு தரப்பட்டுள்ள‌ அதிகாரத்தை பயன்படுத்தி (In exercise of the powers vested in the Court) மனுதாரரை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.