CBSE Results: சிபிஎஸ்சி +2 தேர்வு முடிவுகள் வெளியீடு

செனனை: CBSE 12th Class Result 2022 declared: நாடுமுழுவதும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் பிளஸ்டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

மத்திய அரசின் பாடதிட்டமான (Syllabus of Central Govt) சிபிஎஸ்சி (CBSE) பாடத்திட்டத்தின் கீழ் பல்வேறு பள்ளிகளில் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த திட்டத்தில் படித்து தேர்வுகள் எழுதிய நிலையில் பல மாதங்களாக தேர்வு முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்து வந்தது.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் (State Board) பயின்ற மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகி, கல்லூரி சேர்க்கை (College Admission) தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்த 12ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிவுகள் வெளியாகாததால் அவர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது. இதனால் கல்லூரி சேர்க்கை தேதி நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், நீண்ட காலமாக சிபிஎஸ்சி மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருந்த +2 தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளில் 94.24 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவர்கள் 91.25 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.cbseresults.nic.in, www.results.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம்.

இதுதவிர 9718397183 என்ற தொலைபேசி எண்ணுக்கும் மிஸ்டு கால் கொடுத்து தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.