No more extra free ration: இனி கூடுதல் இலவச ரேஷன் இல்லையாம்.. மாநிலங்களுக்கு மத்திய அரசு ‘செக்’

புதுடில்லி : பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு கூடுதலாக வழங்கப்படும் இலவச ரேஷனை, வரும் 31ம் தேதிக்கு மேல் நீட்டிக்க வேண்டாம் என மத்திய அரசு முடிவு செய்யப்பட்டது.

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள 81.35 கோடி ஏழைகளுக்கு ஓராண்டுக்கு இலவச ரேஷன் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நாடு முழுவதும் ஏழைகளுக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாதந்தோறும் தலா ஒருவருக்கு 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் மூலம் அரிசி கிலோ ரூ.3க்கும், கோதுமை கிலோ ரூ.2க்கும் வழங்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே கொரோனா தொற்று பரவல் காரணமாக, ‘பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா’ திட்டத்தின் கீழ், கூடுதலாக 5 கிலோ உணவு தானியங்கள் நியாய விலைக்கடை வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த திட்டத்தில் வழங்கப்படும் உணவு தானியங்களுக்கான செலவில் 90 சதவீதத்தை மத்திய அரசே ஏற்றுக் கொள்கிறது. மீதமுள்ள 10 சதவீதத்தை அந்தந்த மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. ஆனால் அதற்கான நற்பெயருக்கு மாநில அரசுகள் உரிமை கொண்டாடி வருவதாக நீண்ட காலமாகவே குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில், பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு கூடுதலாக வழங்கப்படும் இலவச ரேஷனை, வரும் 31ம் தேதிக்கு மேல் நீட்டிக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. அதே நேரம், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், 81.35 கோடி ஏழை எளிய மக்களுக்கு ஓராண்டுக்கு இலவச ரேஷன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன் வாயிலாக, மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் என, மத்திய உணவுத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார். இதன் வாயிலாக, ரேஷன் உணவு திட்டத்திற்கான நற்பெயரை மாநில அரசுகள் இனி சொந்தம் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

The central government has decided not to extend the free ration provided to the poor under the Prime Minister Garib Kalyan Yojana beyond the coming 31st.