Police seized Gutka: ரூ.5 லட்சம் மதிப்புடைய குட்கா மற்றும், காரை பறிமுதல் செய்த காரிமங்கலம் போலீசார்

காரிமங்கலம்: தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் (Police seized Gutka) வழியாக தேசிய நெடுஞ்சாலையில் கார் மற்றும் கன்டெய்னர் லாரிகள், இரு சக்கர வாகனங்கள் என்று பல வற்றில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட சில போதைப்பொருட்களை பெங்களூரில் இருந்து சேலம் மற்றும் பிற மாவட்டங்களுக்கு கடத்தி செல்லப்படுவதாக கூறப்படுகிறது.

இது பற்றிய ரகசிய தகவல் காரிமங்கலம் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து காவல் ஆய்வாளர் வெங்கட்ராமன் தலைமையிலான உதவி ஆய்வாளர் ஜவகர் குமார் மற்றும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் காவலர் ரவிந்திரன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

அந்த நேரத்தில் சந்தேகப்படியான கார் ஒன்றை தடுத்து நிறுத்த முயற்சித்தபோது காரை ஓட்டி வந்த நபர் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளார். அந்த காரை பின்தொடர்ந்த போலீசார் மாட்லாம்பட்டி அருகே உள்ள பைசுஅள்ளி தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக அக்காரை நிறுத்திவிட்டு தப்பியோடியுள்ளார். அந்த காரை பறிமுதல் செய் போலீசார் அதனை சோதனை செய்தபோது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பிற பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

அதன் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் இருக்கும் எனவும் தெரியவந்தது. இதனையடுத்து காரையும், குட்காவையும் போலீசார் பறிமுதல் செய்து தப்பியோடிய நபர் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் இது போன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெற்றால் வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி வரப்படும் போதைப்பொருட்களை கண்டுப்பிடித்து ஒழிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தியை பார்க்க:Sasikala Pushpa House Attack: பா.ஜ. துணைத்தலைவர் சசிகலா புஷ்பா வீடு, கார் மீது தாக்குதல்: தி.மு.க. கவுன்சிலர்கள் மீது வழக்கு

முந்தைய செய்தியை பார்க்க:Highways Road Parking: பாலக்கோடு: எம்.ஜி.சாலையை இருபுறமும் ஒரு வழி சாலையாக மாற்றி வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாற்றிய போலீசார்