Nirmala Sitharaman admitted to AIIMS: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி: Union Finance Minister Nirmala Sitharaman admitted to AIIMS Delhi for a routine check-up. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) இன்று அனுமதிக்கப்பட்டார். 63 வயதான அமைச்சர் நிர்மலா சீதாராமன் மதியம் 12 மணியளவில் மருத்துவமனையின் தனியார் வார்டில் அனுமதிக்கப்பட்டார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. வழக்கமான பரிசோதனைக்காக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 35வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் நிர்மலா சீதாராமன் கடந்த சனிக்கிழமை கலந்து கொண்டார். தமிழகத்தில் மருத்துவக் கல்வியை வலுப்படுத்துவது உறுதியான தேவை இருப்பதால் அதை தமிழ் மொழியில் கற்பிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் தெரிவித்திருந்தார்.