Hotel fire : சொகுசு விடுதியில் தீ விபத்து: 4 பேர் பலி, 20 பேர் மீட்பு

Lucknow : மீட்பு பணியில் உயிர் பிழைத்த இருபது பேரில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது

உத்தரபிரதேசம்: லக்னோவில் உள்ள ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் உள்ள மதன் மோகன் மாளவியா மார்க்கில் உள்ள லெவனா சூட்ஸ் என்ற சொகுசு ஹோட்டலில் (At a luxury hotel called Levana Suites) இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் குறைந்தது நான்கு பேர் இறந்துள்ளனர் மற்றும் இருபது பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். மூன்று மாடி கட்டிடத்தில் இன்னும் ஐந்தாறு பேர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. மீட்பு நடவடிக்கையில் உயிர் பிழைத்த இருபது பேரில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மூன்று தீயணைப்பு வாகனங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

தகவல்களின்படி, ஹோட்டலின் இரண்டாவது மாடியில் உள்ள ஹோட்டல் அறையில் ஒரு குடும்பம் இன்னும் சிக்கியிருக்கலாம் என்று அஞ்ச‌ப்படுகிறது (It is feared that a family may still be trapped in the room). இரண்டாவது மாடியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த துணை முதல்வர் பிரிஜேஷ் பதக் (Deputy Chief Minister Brijesh Pathak), ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து மேலும் விசாரணை நடத்த உத்தரவிட்டார். முதற்கட்ட அறிக்கை விரைவில் வெளியாகும் என்று அவர் தெரிவித்தார். தீ விபத்து குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளிடம் உறுதியளித்தார். சம்பவ இடத்திலிருந்து நேரடியாக நகர மருத்துவமனைக்குச் சென்ற பிரிஜேஷ் பதக், ஹோட்டல் தீ விபத்தில் சிக்கி, மீட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஹோட்டல் அறைகள் புகையால் நிரம்பியுள்ளன (Hotel rooms are filled with smoke). அதனால் உள்ளே ஊடுருவுவது கடினமாக உள்ளது. ஜன்னல் கண்ணாடிகள், கிரில்களை உடைக்கும் பணியை செய்து வருகிறோம். ஏற்கனவே இருபது பேர் மீட்கப்பட்டதாக தீயணைப்புப் படையின் டிஜி தெரிவித்தார்.

பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் ஷியாம் பிரசாத் முகர்ஜி (Shyam Prasad Mukherjee) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க தயாராக உள்ளோம் என மருத்துவமனை இயக்குநர் ஆனந்த் ஓஜா தெரிவித்துள்ளார்.