Letter to Panchayt Presidents: ஊராட்சித் தலைவர்களுக்கு மத்திய அமைச்சர் கடிதம்

புதுடெல்லி: Central Minister letter to Panchayt Presidents: அனைத்து ஊராட்சி தலைவர்களுக்கும் மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங் கடிதம் அனுப்பியுள்ளார்.

திருத்தியமைக்கப்பட்ட தேசிய பஞ்சாயத்து விருதுகளில் பங்கேற்க வலியுறுத்தி ஊராட்சித் தலைவர்களுக்கு மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங் கடிதம் எழுதியுள்ளார். இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்கள் 2022 செப்டம்பர் 10 முதல் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை இணையதளம் மூலம் சமர்ப்பிக்க அக்டோபர் 31ம் தேதி கடைசி நாள் ஆகும்.

கிராமப்பகுதிகளில், உள்ளூர் மயமாக்கம், நீடிக்கவல்ல வளர்ச்சி இலக்குகளில் சாதனை தொடர்பான பொருள்களில் வட்டார, மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் சிறந்த முறையில் செயல்படும் பஞ்சாயத்துகளை அங்கீகரிக்கவும், பாராட்டவும், ஊக்கப்படுத்தவும், இந்த விருதுகளின் வடிவம், நடைமுறை மற்றும் வகைமைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக தமது கடிதத்தில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வறுமை இல்லாத விரிவான வாழ்வாதாரம் உள்ள கிராமம், ஆரோக்கியமான கிராமம், குழந்தைகளுக்கு உகந்த கிராமம், தண்ணீர் தன்னிறைவு கிராமம், தூய்மை மற்றும் பசுமை கிராமம், அடிப்படைக் கட்டமைப்பில் தன்னிறைவு பெற்ற கிராமம், சமூக ரீதியில் பாதுகாப்பான நியாயமான கிராமம், நல்ல நிர்வாகத்துடனான கிராமம், பெண்களுக்கு ஏற்புடையதான கிராமம் என ஒன்பது மையப் பொருட்களில் விருதுகள் பரிசீலிக்கப்பட உள்ளன.

புதிதாக மறு சீரமைக்கப்பட்டுள்ள தேசிய பஞ்சாயத்து விருதுகள் பற்றிய விரிவான தகவல் மற்றும் நடைமுறைகளை www.panchayataward.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க 15ம் தேதி கடைசி:
அடுத்த குடியரசு தின விழாவில், அறிவிப்பதற்கான பத்ம விருதுகள், 2023க்கு இணையம் வழியாக விண்ணப்பித்தல் மற்றும் பரிந்துரை செய்வது மே 1ம் தேதி தொடங்கப்பட்டது. இதற்கான கடைசி தேதி செப்டம்பர் 15ம் தேதி ஆகும். விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் தேசிய விருது இணையப்பக்கம் (https://awards.gov.in) மூலமாகவே அனுப்பப்பட வேண்டும்.

இந்த விருது பெற விண்ணப்பிக்கின்றவர் அல்லது பரிந்துரைப்பவர் பொருத்தமான விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையப்பக்கத்தில் உள்ள படிவத்தில் (800 வார்த்தைகளுக்கு மிகாமல்) குறிப்பிட வேண்டும். சிறப்புமிக்க சாதனைகள், சம்பந்தப்பட்ட துறையில் சேவை, ஆகியவை பற்றி குறிப்பிட வேண்டும்.

உள்துறை அமைச்சகத்தின் விருதுகள் மற்றும் பதக்கங்கள் என்ற தலைப்பிலான இணையதளத்திலும் (https://mha.gov.in) பத்ம விருதுகளுக்கான இணையப்பக்கத்திலும், (https://padmaawards.gov.in) பத்மவிருதுகளுக்கான விவரங்களை பெற்றுக் கொள்ளலாம். இந்த விருதுகளுக்கான விதிமுறைகள் (https://padmaawards.gov.in/AboutAwards.aspx) என்ற இணையப்பக்கத்தில் கிடைக்கும்.