Teen Serial Killer : ‘கேஜிஎஃப்’ ராக்கி பாய் போல ஆக‌ தொடர் கொலை

போபால்: Teen Serial Killer : இந்திய அளவில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற கேஜிஎஃப் திரைப்படத்தால் ஈர்க்கப்பட்டு, அந்த திரைப்படத்தைப் போலவே ராக்கி பாய் மற்றும் டான் ஆக நினைந்த ஒரு இளைஞன் ஒருவர் தொடர் கொலைகளில் ஈடுபட்டுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் (Madhya Pradesh state Bhopal) இந்த சம்பவம் நடந்துள்ளது. தொடர் கொலையாளி 19 வயது சிவபிரசாத் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் சிவபிரசாத் கொலை செய்யும் காட்சி சிசி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது, ​​தொடர் கொலையாளி சிவபிரசாத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

கொலையாளி சிவபிரசாத் மூன்று தனியார் காவலர்களைக் கொலை செய்துள்ளார் (He killed three private guards). சாகர் என்ற‌ பகுதியில் இருவர் கொல்லப்பட்ட நிலையில், போபாலில் ஒரு காவலர் கொல்லப்பட்டார். போபாலில் காவலர் கொலை செய்யப்பட்ட காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இரவில் தூங்கிக் கொண்டிருந்த காவலாளியின் தலையில் சுத்தியல் போன்ற தடியால் தாக்கி கொலை செய்துள்ளார்.

அந்த காவலாளியைக் கொலை செய்த‌ பிறகு, கொலையாளி சிவபிரசாத் அவரிடம் இருந்த செல்போன்களை திருடிச் சென்றுள்ளார் (Cell phones have been stolen). அந்த செல்போன்கள் இருந்த இடத்தை வைத்து போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்து அழைத்துச் செல்லும் போது சிவபிரசாத் வெற்றிச் சின்னத்தை காட்டியபடி சென்றுள்ளார்.

மேலும், முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த தகவலின்படி, ராக்கிங் ஸ்டார் யஷ் நடித்த கேஜிஎஃப் படத்தைப் பார்த்த சிவபிரசாத் (Sivaprasad who watched the film KGF), தானும் டான் ஆகிவிட வேண்டும் என்று நினைத்துள்ளார். எனவே, தனியார் பாது காவலர்களை முதலில் குறி வைத்துள்ளார். பாதுகாவலர்களை தொடர்ந்து, போலீசாரை கொலை செய்ய‌ சதி தீட்டி உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ள‌து. தொடர் கொலைகள் செய்தால் டான் ஆகி கை நிறைய சம்பாதிக்கலாம் என்று இளைஞர் சிவபிரசாத் நினைத்ததாக தெரிகிறது. இதன் காரணமாகத்தான் டான் ஆக நினைத்தவர், தொடர்கொலைகளை செய்து, காவல்துறையின் வலையில் சிக்கி உள்ளார். தற்போது சிறைகளில் கம்பிகளை எண்ணும் சூழலுக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.