Precious stones seizure by Chennai Air Customs: சென்னை விமான நிலையத்தில் தங்கம், விலை உயர்ந்த கற்கள் பறிமுதல்

சென்னை: Precious stones worth if 23.13 Lakhs seizure by Chennai Air Customs. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.59.70 லட்சம் மதிப்புள்ள 1.281 கிலோகிராம் தங்கம், ரூ.4.86 லட்சம் மதிப்புள்ள மின்னணு பொருட்கள், ரூ.23.13 லட்சம் மதிப்புள்ள 1706.05 கேரட் விலை உயர்ந்த கற்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் கே.ஆர். உதய் பாஸ்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சுங்கத்துறையினருக்கு கிடைத்த உளவுத்தகவலின் படி, 22.08.2022 சென்னை திருவல்லிக்கேணி மற்றும் ஆலந்தூரைச் சேர்ந்த 2 ஆண் பயணிகளிடம் சோதனை நடத்திய போது ரூ.59.70 லட்சம் மதிப்புள்ள 1.281 கிலோகிராம் தங்கம், ரூ.4.86 லட்சம் மதிப்புள்ள மின்னணு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தை இவர்கள் பசை வடிவில் ஆசனவாயில் மறைத்து கொண்டுவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மற்றொரு சோதனையின் போது, இலங்கையைச் சேர்ந்த ஒரு பயணியிடமிருந்து ரூ.23.13 லட்சம் மதிப்புள்ள 1706.05 கேரட் விலை உயர்ந்த கற்கள் கைப்பற்றப்பட்டது. இவற்றை சுங்கத்துறையினர் கைப்பற்றி தொடர் விசாரணை மேற்கொண்டனர்.

சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறை முதன்மை ஆணையர் திரு கே ஆர் உதய் பாஸ்கர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 26.08.2022 அன்று டாக்காவிலிருந்து வந்த விமானத்தை சுங்கத்துறையினர் சோதனையிட்டபோது அந்த விமானத்தின் கழிவறை ஒன்றில் ரூ.45.15 லட்சம் மதிப்புள்ள 995 கிராம் எடையுள்ள ஒரு தங்கக் கட்டி கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் 25.08.2022 அன்று நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 29.92 லட்சம் மதிப்புள்ள 642 கிராம் தங்கமும், 24.08.2022 அன்று நடத்தப்பட்ட சோதனையில் ரூ.78.46 லட்சம் மதிப்புள்ள 1.736 கிலோ கிராம் தங்கமும், 23.08.2022 அன்று நடத்தப்பட்ட சோதனையில் ரூ.55.59 லட்சம் மதிப்புள்ள 1.2 கிலோ கிராம் தங்கமும், 22.08.2022 அன்று நடத்தப்பட்ட இருவேறு சோதனைகளில் ரூ.73.79 லட்சம் மதிப்புள்ள 1.622 கிலோ கிராம் தங்கமும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த 22.08.2022 முதல் 26.08.2022 வரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் ரூ.2.83 கோடி மதிப்பிலான 6.2 கிலோ தங்கம் சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது.