Biju Patnaik : பீஜு பட்நாயக்கைப் பற்றி இந்தியர்கள் அறிந்து கொள்வது அவசியம்

Indians need to know about Biju Patnaik : பிஜு பட்நாயக் (1916–1997) இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் பிஜு பாபு எனவும் அறியப்படுகிறார். 1916 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி ஒரிசாவில் உள்ள கட்டாக்கில் பிறந்த பிஜயானந்தா பட்நாயக் ,லக்‌ஷ்மிநாராயண் மற்றும் ஆஷ்லதா பட்நாயக்கின் மகனாவார்.

கட்டாக்கில் உள்ள ரவென்ஷா கல்லூரியில் அவர் அறிவியல் கல்வி பெற்றார். அவரது மாணவப் பருவ நாட்களில் விளையாட்டுகளில் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டவர், பல்கலைக்கழக கால்பந்து மற்றும் ஹாக்கி அணிகளுக்குத் தலைவராகவும் இருந்தார். ஏரோநாட்டிகல் டிரைய்னிங் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியாவில் (Aeronautical Training Institute of India) விமானவியல் பாடத்தில் கல்வி பயின்றார். இந்திய தேசிய விமானப்படையில் சேர்ந்த அவர், 1940 முதல் 1942 வரையில் நடைபெற்ற போரிலும் கலந்துகொண்டார். 1940-42 ஆம் ஆண்டுகளில் நடந்த போரின் போது வான் வழிப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றினார். அதற்குப்பின் வெள்ளையனே வெளியேறு இயக்கத்துடன் அவரது நடவடிக்கைகள் காரணமாக 1945 ஆம் ஆண்டு வரை சிறையில் இருந்தார். மகாத்மா காந்தி, கோபபந்து தாஷ் மற்றும் மதுசூதன் தாஸ் ஆகியோரின் மூலம் ஈர்க்கப்பட்ட பட்நாயக் இந்திய சுதந்திர இயக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

1953 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நேபாளிய ஜனநாயக இயக்கத்துடன் நெருங்கியத் தொடர்பு வைத்திருந்த பட்நாயக், 1947 ஆம் ஆண்டில் டச்சிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக இந்தோனேசியா நடத்திய தீவிரமான போராட்டத்தில் அவர்களுக்கு உதவும் கருவியாகவும் செயல்பட்டார். இந்தோனேசியா அதன் உயர்ந்த குடிமுறை சார்ந்த விருதான பூமி புத்ராவை (நாட்டின் குடிமகன் விருது) பட்நாயக்கிற்கு வழங்கியது. ஒரு இந்தியர் இறந்ததிற்காக மற்றொரு நாட்டின் தேசியக்கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது இவர் ஒருவருக்காக மட்டுமே. “இந்தியாவின் கடற்கொள்ளையர்” என பட்நாயக்கை நேரு பாசமாக அழைப்பார் (Nehru fondly called Patnaik “the pirate of India”). இந்தியப் நாடாளுமன்றத்தில் அவரது காலத்தின் போது, “தைரியம், இயக்கத்தன்மை மற்றும் பணிக்குரிய சுறுசுறுப்பு ஆகியவற்றை பிஜு பட்நாயக் கொண்டுள்ளார்” என நேரு கூறினார் ஒரிசா மாநிலத்தில் முதலவ‌ராக இருமுறை இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1960 ஆம் ஆண்டில் முதன் முறையும், 1990 முதல் 1995 ஆம் ஆண்டு வரை இரண்டாவது முறையும் முதல்வ‌ராக இருந்தார்.

பிஜு பட்நாயக் ஒரு விமானி மற்றும் இரண்டாம் உலகப் போரின்போது சோவியத் யூனியன் சிக்கலில் இருந்தபோது, ​​டகோட்டா என்ற போர் விமானத்தை பறக்கவிட்டு ஹிட்லரின் படைகளை குண்டுவீசி தாக்கினார், இது ஹிட்லரை பின்வாங்கச் செய்தது (It made Hitler back down). அவருக்கு மிக உயர்ந்த விருது வழங்கப்பட்டது மற்றும் சோவியத் யூனியனால் அவருக்கு கௌரவ குடியுரிமை வழங்கப்பட்டது. காவாலிகள் காஷ்மீரைத் தாக்கியபோது, ​​1947 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி தில்லியிலிருந்து ஸ்ரீநகருக்கு ஒரு நாளையில் பல முறை விமானங்களை பறக்கவிட்டு வீரர்களை ஸ்ரீநகருக்கு ஏற்றிச் சென்றவர் பிஜு பட்நாயக். இந்தோனேசியா ஒரு காலத்தில் டச்சுக்காரர்களின் காலனியாக இருந்தது, அதாவது ஹாலந்து மற்றும் டச்சுக்காரர்கள் இந்தோனேசியாவின் ஒரு பெரிய பகுதியை ஆக்கிரமித்தனர். டச்சு வீரர்கள் இந்தோனேசியாவைச் சுற்றியுள்ள கடல் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அதோடு மட்டுமல்லாது அவர்கள் எந்த இந்தோனேசிய குடிமக்களையும் வெளியே விடவில்லை.

இந்தோனேசியா 1945 இல் டச்சுக்காரர்களிடமிருந்து விடுவிக்கப்பட்டது, மீண்டும் ஜூலை 1947 ஆம் ஆண்டு இல் பி.எம். சுதன் ஸ்ஜஹ்ரிர் டச்சுக்களால் வீட்டில் கைது செய்யப்பட்டார். அவர் இந்தியாவின் உதவியை நாடினர். அப்போதைய இந்தோனேசிய பிரதமர் ஸ்ஜாரிரை இந்தியாவுக்கு மீட்குமாறு பிஜு பட்நாயக்கிடம் நேரு கேட்டுக் கொண்டார். 1947 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி, பிஜு பட்நாயக்கும் அவரது மனைவியும் உயிரைப் பொருட்படுத்தாமல் டகோட்டா விமானத்தை எடுத்துக்கொண்டு, டச்சுக்காரர்களின் கட்டுப்பாட்டுப் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, ​​அவர்கள் அந்த பகுதியில் தரையிறங்கி, இந்தோனேசியப் பிரதமரை மீட்டு பாதுகாப்பாக சிங்கப்பூர் வழியாக இந்தியாவுக்கு அழைத்து வந்தனர். இச்சம்பவம் அவர்களுக்குள் அளப்பரிய ஆற்றலை உருவாக்கி அவர்கள் டச்சு வீரர்களைத் தாக்கி இந்தோனேஷியாவை முற்றிலும் சுதந்திர நாடாக மாறியது. பின்னர், இந்தோனேசிய அதிபர் சுகர்னோவின் மகள் பிறந்ததும், பிஜு பட்நாயக்கையும் அவரது மனைவியையும் அழைத்தார். அப்போது பிஜு பட்நாயக்கும் அவரது மனைவியும் இந்தோனேசியா அதிபரின் மகளுக்கு மேகாவதி என்று பெயர் சூட்டினர். இந்தோனேசியா 1950 இல் பிஜு பட்நாயக்குக்கும் அவரது மனைவிக்கும் தங்கள் நாட்டின் கௌரவக் குடியுரிமை விருதான ‘பூமி புத்ரா’ வழங்கியது. பின்னர் அவருக்கு அவர்களின் 50வது ஆண்டு சுதந்திரத்தின் போது இந்தோனேசியாவின் மிக உயர்ந்த கவுரவ விருதான ‘பிண்டாங் ஜசா உத்மா’ வழங்கப்பட்டது.

1997-ஆம் ஆண்டு பிஜு பட்நாயக்,இறந்தப்போது அவரது உடல் மீது 3 நாட்டின் தேசியக் கொடிகள் அவரது மீது போர்த்தப்பட்டன‌. அந்த நாடுகள் இந்தியா, ரஷ்யா மற்றும் இந்தோனேசியா ஆகியவை ஆகும். பிஜு பட்நாயக்கின் மறைவுக்குப் பிறகு, இந்தோனேசியாவில் ஏழு நாட்கள் அரசு துக்கம் அனுசரிக்கப்பட்டது, ரஷ்யாவில் ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்பட்டு அனைத்து கொடிகளும் இறக்கப்பட்டன.