Third CM proposal again in Karnataka : கர்நாடகத்தில் மீண்டும் மூன்றாவது முதல்வர் முன்மொழிவு: பாஜக எம்எல்ஏக்கள் அதிர்ச்சி

2013 ஆம் ஆண்டு, பல்வேறு காரணங்களை கூறி, மூன்று தலைவர்களை, தவணை முறையில், பாஜக‌ முதல்வர் ஆக்கியது. 2013 க்குப் பிறகு, இந்த அரசியல் குழப்பத்தாலும், ரிசார்ட் அரசியலாலும் அலுத்துப் போன மக்கள், பாஜகவை ஓரம் கட்டிவிட்டு, காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து ஆட்சியில் அமர வைத்தனர்.

பெங்களூரு: Third CM proposal again in Karnataka, BJP MLAs shocked : மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசாங்கத்தின் மூன்றாவது முதல்வர் பற்றி நிறைய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன‌. மூன்றாவது முதல்வர் விரைவில் ஆட்சிக்கு வருவார் என்று சுட்டுறையில் காங்கிரஸ் பதிவிட்டு, பாஜகவை மட்டம் தட்டும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. விரைவில் முதல்வர் மாற்றம் வரும் என தெரிந்தாலும், முதல்வர் மாற்றம் இல்லை, [பசவராஜ் பொம்மை தலைமையில் தேர்தல் நடக்கும் என, பாஜக‌ தலைவர்கள் கனவு கண்டு வருகின்றனர். ஆனால், இதனால் பாதிக்கப்படுவது அக்கட்சியின் எம்எல்ஏக்கள்தான், கடந்த பாஜக ஆட்சி காலத்தில் மூன்று முதல்வர்களை மாற்றப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை நினைத்து, தற்போது எம்எல்ஏக்கள் கவலையடைந்துள்ளனர்.

மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வரும் போதெல்லாம் அரசியல் கேலிக்கூத்துகள் நடைபெறுவது சகஜம். 2013-ல் பாஜக ஆட்சிக்கு வந்தபோதும், முதல்வர் மாற்றம் என்ற கூத்தால் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள போதும் பழைய போக்குதான் பாஜகவில் தொடர்கிறது. பாஜக மேலிடத்தின் முடிவால் 6 மாதம் முதல் ஓராண்டுக்கு ஒருமுறை முதல்வரை மாற்றுவது பாஜகவின் நடைமுறையால், பொதுமக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். தற்போது மீண்டும் முதல்வர் மாற்றம் (The chief minister has change again)என்ற செய்தி வெளியாகியுள்ளதால் பாஜக எம்எல்ஏக்கள் கவலையடைந்துள்ளனர்.

2013 ஆம் ஆண்டு, பல்வேறு காரணங்களை கூறி, மூன்று தலைவர்களை, தவணை முறையில், பாஜக‌ முதல்வர் ஆக்கியது. 2013 க்குப் பிறகு, இந்த அரசியல் குழப்பத்தாலும், ரிசார்ட் அரசியலாலும் அலுத்துப் போன மக்கள், பாஜகவை ஓரம் கட்டிவிட்டு, காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து ஆட்சியில் அமர வைத்தனர். தற்போது, 2023 தேர்தலின் போது, ​​மூன்றாவது முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்கான திரைமறைவு வேலைகள் நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து பாஜக எம்எல்ஏக்கள் (BJP MLAs) கட்சித் தலைவர்களிடம் தங்களது கவலையை தெரிவித்து வருகின்றனர்.

மாநிலத்தில் பெய்த கனமழையால் சேதம் ஏற்பட்டுள்ளது (Heavy rains have caused damage in the state). விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்படுகின்றனர். இந்த நேரத்தில், இது அரசியல் கருத்துக்கள் மக்கள் மனதில் எதிர்மறையான உணர்வை உருவாக்குகின்றன. எம்எல்ஏக்களான நாங்கள் அமைச்சர் ஆகும் கனவு வெகு தூரத்தில் உள்ளது. கட்சியின் இது போன்ற நடவடிக்கையால் தொகுதி மக்களிடம் முகம் காட்டுவது சிரமமாக உள்ளது. எனவே இவ்வாறான அரசியல் மாற்றங்களை விடுத்து குழப்பங்களைச் சரிசெய்து கொண்டு கட்சியையும், ஆட்சியையும் முன்னெடுத்துச் செல்ல‌ வேண்டும்.

மேலும், கட்சிக்கு பாதிபை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளும் அதிருப்தியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து, முதல்வர் மற்றும் பாஜக மேலிடத் தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் (It should be brought to the attention of top BJP leaders). தேர்தல் காலத்தில் இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கூடாது என அனுபவம் வாய்ந்த எம்எல்ஏக்கள் மட்டுமின்றி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் உள்பட பலரும் கட்சித் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகத் தெரிகிறது.