Gram Sabha meeting on 15th: நாமக்கல் மாவட்டத்தில் 322 ஊராட்சிகளில் வரும் 15ம் தேதி கிராம சபா கூட்டம்

நாமக்கல்: Gram Sabha meeting will be held on 15th in 322 panchayats in Namakkal district: நாமக்கல் மாவட்டத்தில் 322 ஊராட்சிகளில் வரும் 15ம் தேதி கிராம சபா கூட்டம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளிலும் 15.08.2022 சுதந்திர தினம் அறு காலை 11.00 மணியளவில் கிராம சபா கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கீழ்க்காணும் பொருள்கள் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட உள்ளது.

  1. வறுமை ஒழிப்புத் திட்டம் உட்பட அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் திட்டங்களினால் தனிநபர் மற்றும் சமுதாயத்தினர் ஒவ்வொரு திட்டத்தின் கீழும் பயன்பெறும் தன்மையினை எடுத்துரைத்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விரிவாக விவாதித்தல், குடிநீரைச் சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி சுகாதாரம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடைசெய்தல், திட்டங்கள் மற்றும் நிதிக்குழு மானிய நிதியில் மேற்கொள்ளப்பட்ட/
    எடுக்கப்பட்டுள்ள பணிகளின் விவரம், ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்த
    எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், நீர்வழிப்பாதை மற்றும் நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றுதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2010 மறு – கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் – ஊரகம், பொறுப்பு துறைகள் ஆகியவைகள் விவாதிக்கப்படும்.
  1. மேலும் சிறுபான்மையினர் விவகாரத் துறையின் மூலம் கல்வி உதவித் தொகை, உணவு பொருள் வழங்குதல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, இதர பொருட்கள், மக்கள் நிலை ஆய்வின் மூலம் கண்டறிப்பட்ட இலக்கு மக்கள் பட்டியலில் உள்ள ஏழை, மிகவும் ஏழை மற்றும் நலிவுற்றோர்களை சேர்த்தல் மற்றும் நீக்குதல், பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY), பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY), வறுமை குறைப்பு திட்டம், இளைஞர் திறன் திருவிழா, ஊராட்சிகளுக்கான கட்டணங்களை இணையவழி செலுத்துதல், கிராம ஊராட்சியின் தணிக்கை ஆகியவைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தெரிந்துகொள்வோம்:
கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு தினம், தொழிலாளர் தினம், இந்திய சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக தண்ணீர் தினம் மற்றும் உள்ளாட்சி தினம் ஆகிய 6 சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது.

இந்தக் கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புணர்வை ஊக்குவித்தல், வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்தப்படுதல் மற்றும் பயனாளிகளின் விருப்பத்தின்படி பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் சமூக தணிக்கைக்கு வழி வகுத்தலே கிராம சபைக் கூட்டதின் நோக்கமாகும். கிராம மக்களின் கையிலிருக்கும் அதிகாரம், கிராம சபைக் கூட்ட நடவடிக்கைகள் ஆகும்.

கிராம சபைக் கூட்டத்தில், தங்கள் கிராமங்களில் அரசு மதுக்கடைகள் நடத்துவதை தடை செய்து தீர்மானம் இயற்றினால், அக்கிராமங்களில் அரசு மதுக்கடைக்களை திறக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிராமச் சபைக் கூட்டத்தின்போது, ஊராட்சி மன்றத்தின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் இருக்க வேண்டும். இல்லையெனில் ஊராட்சி மன்றத்தின் மக்கள் தொகை ஏற்றவாறு கிராம சபைக் கூட்டம் நடத்தலாம்.