Income tax collection last year: கடந்த ஆண்டு வருமான வரி வசூலில் தமிழகம் 4ம் இடம்

புதுடெல்லி: 25.5% growth in Income Tax net collection compared to the last year. கடந்த ஆண்டை விட இந்த நிதியாண்டில் இதுவரையிலான வருமான வரி வசூல் 25 சதவீதம் அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நன்றாக நகரமயமாக்கப்பட்ட பகுதியாகும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நிதியாண்டு 1991-1992ல் நேரடி வரி வசூல் ரூ 1,108 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டில் (2021-22) மொத்த நேரடி வரி வசூல் முதன்முறையாக ஒரு லட்சம் கோடி இலக்கை எட்டியது. அதாவது ரூ 1,01,499 கோடி, நிகர வரி வசூல் 90,108 கோடி.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நாட்டின் கருவூலத்திற்கு நிதி பங்களிப்பில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக நான்காம் இடத்தில் உள்ளது. நடப்பு நிதியாண்டில் வரி வசூல் இலக்கு ரூ 1,08,200 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இலக்கு ரூ 81,000 கோடிகள் விட 33% அதிகம். கடந்தாண்டின் வரி வசூலை நடப்பாண்டின் வரி வசூலை ஒப்பிடும்போது, அதன் வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நான்காம் இடத்தில் உள்ளது.

இன்றைய தேதியில் மொத்த வரி வசூல் ரூ 92,920 கோடி, கடந்த நிதியாண்டில் இதே தேதியில் மொத்த வரி வசூல் ரூ 73,035 ஆகும், மொத்த வரி வசூலில் கடந்தாண்டை விட நடப்பாண்டில் மொத்த வரி வசூலின் வளர்ச்சி 27.23 % விழுக்காடு ஆகும். இன்றைய தேதியில் நிகர வரி வசூல் ரூ 80,480 கோடி, கடந்த நிதியாண்டில் இதே தேதியில் நிகர வரி வசூல் ரூ 64,102 ஆகும், நிகர வரி வசூலில் கடந்தாண்டை விட நடப்பாண்டில் நிகர வரி வசூலின் வளர்ச்சி 25.5 % விழுக்காடு ஆகும். நிதியாண்டு 2021-22ல் நிகர வரி வசூல் ரூ 90,180 கோடி, இதில் T.D.S ன் வரி வசூல் ரூ 47,977 கோடி ( அஃதாவது 53 விழுக்காடு). நிதியாண்டு 2022-23ல் T.D.S ன் வரி வசூல் இன்றைய தேதியில் ரூ 47,313 கோடி, இதே தேதியில் சென்ற நிதியாண்டை விட இவ்வருட T.D.S ன் வரி வசூலின் வளர்ச்சி 27 % விழுக்காடு ஆகும்.

மூலத்தில் பிடிக்கப்படும் வரி (Tax Deducted at Source -TDS) / மூலத்தில் வசூலிக்கப்படும் வரி (Tax Collected at Source -TCS) என்பது “நீங்கள் சம்பாதிக்கும்போதே செலுத்தவும்” என்கிற அடிப்படையில் அரசாங்க கருவூலத்திற்கு சீரான வருவாயை வழங்கும் பொருட்டு உருவானது. வரிகளை வசூலிக்க இது ஒரு திறமையான மற்றும் எளிமையான வழியாகும். வரி விதிக்கக்கூடிய வருமானம் உள்ளவர்களுக்கு இது ஒரு சுய தணிக்கைக்கான பாதையை உருவாக்குகிறது.

தற்போது, ​​அகில இந்திய அளவிலான மொத்த வரி வசூலில் 50% TDS பங்களிக்கிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிராந்தியத்தில், 2021-22 நிதியாண்டில் மொத்த நிகர வரி வசூலில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள TDS ஆணையரகங்கள் 53% பங்களித்துள்ளன. 2022-23 நிதியாண்டில் (31.12.2022 வரை), TDS/TCS வசூல் ரூ.38,817 கோடி மற்றும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 41% கவனிக்கக்கூடிய விகிதத்தில் வளர்ந்து வருகிறது.

பல்வேறு பரிவர்த்தனைகளுக்கு வரியானது பிடித்தம்/வசூல் செய்யப்படுகிறது மற்றும் சம்பளம், வாடகை, கமிஷன், வட்டி, ஒப்பந்தங்கள், தொழில்சார் சேவைகள், ஏலத்தில் பொருட்களை வாங்குதல், அசையா சொத்து வாங்குதல், வங்கிகளில் பணம் எடுத்தல், இ-காமர்ஸ் பரிவர்த்தனைகள் போன்ற TDS/TCSகளை ஈர்க்கும் 30 வகையான கட்டணங்கள் உள்ளன. மூலத்தில் பிடிக்கப்பட்ட/வசூலிக்கப்பட்ட வரியானது (TDS/TCS), குறிப்பிட்ட தேதிக்குள், வழக்கமாக அடுத்த மாதத்தின் 7ம் தேதிக்குள் மத்திய அரசின் கணக்கில் டெபாசிட் செய்யப்பட வேண்டும்.

மேலும் அவர்கள் வரி பிடித்தம் மற்றும் வசூல் கணக்கு எண் (TAN), பணம் செலுத்திய விவரங்கள், வரி பிடித்தம் செய்தது மற்றும் அரசாங்க கணக்கில் செலுத்தியது, முதலியவற்றை குறிப்பிட்டு, வரி பிடித்தம் செய்யப்பட்ட நபர்கள் வாரியாக, காலாண்டு TDS அறிக்கைகளையும் தாக்கல் செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே வரி பிடித்தம்/வசூல் செய்யப்பட்ட நபர்கள் தங்கள் வருமான வரி ரிட்டன்களில் அந்த வரி வரவை கோர முடியும்.

வரிகளை வசூலிக்கும் முறையில் TDS இன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, பல்வேறு விதிகளையும் சரியாக கடைபிடிக்க வேண்டியது அவசியம். இது சம்பந்தமாக, TDS/TCS விதிகள் மற்றும் அதற்கு இணங்குவது பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்காக Outreach மற்றும் Corporate Connect வடிவில் வருமான வரித்துறை பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

கடந்த செப்டம்பர் 2021 முதல் தமிழ்நாடு முழுவதும் இதுவரை 193 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. TDS இணக்கங்களைச் சரிபார்க்கும் பொருட்டு, e-verification மற்றும் வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 133A(2A)-ன் கீழ் Survey நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது. 2021-22 மற்றும் 2022-23 நிதியாண்டுகளில், கூட்டுறவு வங்கிகள், உற்பத்தியாளர்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள், மீடியா, லாஜிஸ்டிக்ஸ் மற்றும் அரசாங்கக் அலுவலகங்கள் போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கி மொத்தம் 124 Survey நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் விளைவாகப் TDS பிடித்தம் செய்யாத / பிடித்தம் செய்து அரசாங்க கருவூலத்தில் செலுத்தப்படாத தொகையாக ரூ.245.89 கோடி கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வரி பிடித்தம் செய்யப்படாவிட்டால் / வசூலிக்கப்படாவிட்டால், வருடத்திற்கு 12% வீதம் வட்டி விதிக்கப்படும் மற்றும் பிடிக்க/சேகரிக்கத் தவறிய TDS/TCS க்கு சமமான தொகை அபராதமாகவும் விதிக்கப்படும். TDS/TCS பணம் செலுத்தாத சந்தர்ப்பங்களில், வருடத்திற்கு 18% வீதம் வட்டி செலுத்த வேண்டும் மேலும் வரி பிடிக்க / வசூலிக்கத் தவறிய நபர்மீது வருமான வரிச் சட்டம், 1961 பிரிவுகள் 276B/276BB-ன் கீழ் வழக்கு தொடர்ந்து, அதன் முடிவாக 3 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனையும் விதிக்க நேரிடும். கடுமையான TDS விதிமீறல் போன்ற குற்றங்கள் கவனிக்கப்பட்டு, வழக்குத் தொடரும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு, பெரிய எண்ணிக்கையிலான வழக்குகளை வருமான வரித்துறை கண்டறிந்துள்ளது. வருமான வரிச் சட்டம் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு குற்றங்களை சுமுகமாக தீர்வுகாணும் திட்டத்தையும் வழங்குகிறது.

வருமானவரித்துறை (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) நடப்பு நிதியாண்டில் (2022-23), (டிசம்பர் 26 வரை) வரி செலுத்த தவறியவர்களுக்கு எதிராக வருமான வரிச் சட்டத்திம் 1961 கீழ் வெவ்வேறு குற்றங்களுக்காக வழக்குகள் தொடரப்பட்டது,
வருமானவரி படிவம் தாக்கல் செய்யாமல் இருப்பது, வரி ஏய்ப்பு செய்வது, மெய் அல்லாத தகவலை வருமானவரி படிவத்தில் தாக்கல் செய்வது, மற்றும் வரி பாக்கியை செலுத்த தவறியது போன்ற குற்றங்களுக்காக நடப்பு நிதியாண்டில் தொடரப்பட்ட வழக்குகளில், ஏழு வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, 3 மாதம் முதல் அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை தண்டனை மற்றும் அபராதம் ரூ 9,70,000/- வரை விதிக்கப்பட்டது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் திரு. ஆர்.ரவிச்சந்திரன், I.R.S., சென்னை வருமான வரி தலைமை ஆணையர் (TDS) திரு.எம்.ரத்தினசாமி, I.R.S., முன்னிலையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இவர்களுடன் சென்னையின் வருமான வரித் துறையின் பிற மூத்த அதிகாரிகளும், வரிக் பிடித்தம்/வசூல் செய்பவர்களை TDS/TCS விதிகளுக்கு இணங்கி, தேசத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்கள்.