Helicopter crash: கேதார்நாத் சென்ற ஹெலிகாப்டர் விபத்து; 2 விமானிகள் உள்ளிட்ட 7 பேர் பலி

கேதார்நாத்: Helicopter carrying Kedarnath pilgrims from Phata crashes, 7 dead. கேதார்நாத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள கருட் செட்டி அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் 2 விமானிகள் மற்றும் பக்தர்கள் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

ஃபாட்டாவில் இருந்து கேதார்நாத் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர், உத்தரகாண்ட் மாநிலத்தில் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் சென்றவர்கள் குறைந்தது 7 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக நிர்வாகக் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.

ஆர்யன் ஏவியேஷன் பெல்-407 ஹெலிகாப்டர் VT-RPN 5 பேக்ஸுடன் கேதார்நாத் தாமில் இருந்து இன்று குப்தகாசிக்கு புறப்பட்டது. கருட சட்டி மீது மேகமூட்டமான வானிலை காரணமாக அங்குள்ள ஒரு பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் பலத்த சத்தத்துடன் ஹெலிகாப்டர் தீப்பிடித்தது.

இந்த விபத்தில் சென்னையை சேர்ந்த பிரேம்குமார், கலா, சுஜாதா ஆகிய 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், “உத்தராகண்டில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால் வேதனை அடைந்தேன். இந்த துயரமான நேரத்தில், எனது எண்ணங்கள் துயரமடைந்த குடும்பத்தினரை பற்றியே உள்ளன’’ என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.