Pondicherry University Admission has extended: புதுச்சேரி பல்கலைக்கழக முதுநிலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

புதுச்சேரி: Pondicherry University has extended the last date for submission of online Application Form for admission to various Post-graduate (P.G.) Degree & P.G. Diploma Programmes based on CUET (PG) – 2022, upto 31.10.2022. புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்புகளுக்கு இணையம் வழியாக விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி 31.10.2022 வரை நீடிக்கப்பட்டுள்ளது

க்யூட் எனப்படும் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு (முதுநிலை பட்டம்) -2022 அடிப்படையில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்புகளுக்கு இணையம் வழியாக விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி 31.10.2022 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

2022-23ஆம் கல்வியாண்டுக்கு புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்புகளுக்கு இணையம் வழியாக விண்ணப்பம் செய்ய விரும்புவோர் 31.10.2022 வரை https://www.pondiuni.edu.in/admissions-2022-23/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

PGQP54 என்பதுடன், க்யூட் எனப்படும் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு (முதுநிலை பட்டம்) -2022-ல் தேர்வு எழுதி உரிய தகுதி பெற்றிருந்தால், PGQP38 தேர்வு எழுதியவர்களும், எம்பிஏ வங்கி தொழில் நுட்பத்திற்கும் விண்ணப்பிக்கலாம்.

தகவல் கையேட்டில் அறிவிக்கப்பட்டுள்ள விதிகள் தவிர, உரிய தகுதி பெற்றிருந்தால் PGQP40 தேர்வு எழுதியவர்களும் எம்ஏ மானுடவியல்/ இந்தி/ தமிழ்/ சமஸ்கிருதம்/ தத்துவம் ஆகியவற்றுக்கும், முதுநிலை நூலக அறிவியல் (M.Lib.I.Sc.), M.P.A.(நாடகம் மற்றும் அரங்கக்கலைகள்) ஆகியவற்றுக்கும் விண்ணப்பிக்கலாம்.