Heavy rain : அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை: பள்ளிகளுக்கு விடுமுறை

பெங்களூரு: Holidays for schools : கர்நாடகாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் கன்னடம், வட‌ கன்னடம், உடுப்பி, ஷிமோகா, சிக்கமகளூரு, குடகு, ஹாசன் மற்றும் கோலார் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.

கடலோர மாவட்ட மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning to fishermen of coastal districts):

மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு மேகமூட்டத்துடன் (Bangalore is cloudy) வியாழக்கிழமை காலை வேளையில் இருந்தது. இன்று காலை தூரலுடன் கூடிய லேசான‌ மழை சில பகுதிகளில் பெய்தது. நேற்று மாலை முதல் பெய்து வரும் மழையால் மாநிலத்தின் தலைநகரில் வசிப்பவர்கள் நேற்று மாலையும் மற்றும் இன்று அதிகாலையிலும் குளிரை அனுபவித்து வருகின்றனர்.

பெங்களூரு நகரம், பெங்களூரு கிராமம், ராம்நகர், சாம்ராஜநகர், தும்கூர், பெல்லாரி மற்றும் கர்நாடகாவின் சித்ரதுர்கா (Bangalore City, Bangalore Village, Ramnagar, Samrajanagar, Tumkur, Bellary and Chitradurga in Karnataka) ஆகிய பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை மற்றும் மஞ்சள் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பெங்களூரில் கனமழை காரணமாக மீண்டும், சாலைகளில் குழிகள் ஏற்பட்டு வருகிறது.இதனையடுத்து பெங்களூரு போக்குவர‌த்து காவல் பிரிவினர் ஜியோ மேப் மற்றும் ஃபிக்ஸ் மை ஸ்ட்ரீட் ஆப் மூலம் பள்ளங்களை கண்டறிந்து வருகின்ற‌னர்.

கனமழை காரணமாக மத்திய பிரதேசத்தின் பல மாவட்டங்களில் நிலைமை மோசமடைந்துள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ள அபாயம் உள்ளது. தொடர் மழையால் வயல்களில் விளைந்து நின்ற பயிர்கள் சேதமடைந்துள்ளன‌. அதேவேளையில் பல வீடுகள் இடிந்து விழுந்து மக்கள் உயிர் மற்றும் உடமைகளை இழக்க நேரிட்டது. மாநிலத்தில் வெள்ளம் பாதித்த மாவட்டங்களைப் பார்வையிடுவதற்காக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் (Chief Minister Shivraj Singh Chouhan) போபாலில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

விதிஷா மாவட்டத்தில் உள்ள கஞ்சபசோடாவில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வான்வழி ஆய்வு நடத்தி வருகிறார். முன்னதாக கஞ்சபசோடாவில் பலத்த மழை பெய்தது. இங்குள்ள நிலைமையை முதல்வர் ஆய்வு செய்தார். வெள்ளம் பாதித்த பகுதிகளை (Flood affected areas)முதல்வர் படகு மூலம் பார்வையிட்டார்.

விதிஷா குணாவுக்குப் பிறகு, ராஜ்கர் மாவட்டத்தில் முதல்வர் வான்வழி ஆய்வு நடத்துகிறார். மாநிலத்தின் நிலைமை குறித்து முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தொடர்ந்து அறிவிப்புகளை அறிவித்து (making announcements) வருகிறார். இது தொடர்பாக‌ அமைச்சர்களுடனும் முதல்வர் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து விரிவான விளக்கம் கேட்டு பெற்றார்.

மழை பாதித்த பகுதிகளை பார்வையிட்டு மக்களுக்கு உதவுமாறு அனைத்து அமைச்சர்களையும் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த சிவராஜ் அமைச்சரவைக் கூட்டத்தை முதல்வர் ரத்து செய்துள்ளார். கன மழையின் பாதிப்பை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் உரிய முடிவு எடுக்க (District administrations to take appropriate decision) மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை காரணமாக இரு மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கு (Flooding in both districts) ஏற்பட்டுள்ள நிலையில், இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவும், விடுமுறையை நீட்டிக்கவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு முடிவு செய்துள்ளது.
ராஜஸ்தானின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள சில‌ பகுதிகளுக்கு IMD கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெள்ளப் பாதிப்பை அடுத்து இரண்டு பேர் இறந்ததை அடுத்து, கோட்டா மற்றும் பூண்டி மாவட்டங்களில் (Kota and Bundi districts) உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் பயிற்சி மையங்களுக்கு இன்று விடுமுறை அறிவித்தன. தொடர் மழை மற்றும் கோட்டா அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால், தாழ்வான பகுதிகளில் இருந்து சுமார் 3,500 பேர் பாதுகாப்பான இடங்கள் மற்றும் தற்காலிக தங்குமிடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.