Cruiser collided with a lorry: பயங்கர சாலை விபத்து: 9 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலி, 11 பேர் நிலைமை கவலைக்கிடம்

9 people died on the spot : ராய்ச்சூர் உள்ளிட்ட வட கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் பெங்களூருக்கு வந்து கொண்டிருந்த குரூஸர் வாகன‌ விபத்துக்குள்ளானது.

தும்கூர்: Cruiser collided with a lorry: லாரி மீது குரூசர் வாகனம் மோதிய பயங்கர சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்த கொடூர சம்பவம் தும்கூர் மாவட்டம் ஷிரா அருகே உள்ள காக்லம்பெல்லா போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் நடந்தது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர், காயமடைந்தவர்கள் ஷிராவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகின்றனர். இந்த பயங்கர சாலை விபத்து இன்று அதிகாலை நடை பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

ராய்ச்சூர் உட்பட‌ வட கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கூலித்தொழிலாளிகள் (Laborers)விபத்துக்குள்ளான குரூஸர் வாகனத்தில் பெங்களூரு சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. குரூசர் வாகனம் பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த போது, ​​ஷிரா அருகே சென்ற லாரியை முந்தி செல்ல குரூசர் ஓட்டுநர் முடிவு செய்தார். ஆனால் லாரியை முந்திச் செல்லும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் குரூஸர் வாகனம் இந்த‌ விபத்தில் சிக்கியது.

அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 20 க்கும் அதிமான கூலித் தொழிலாளர்கள் பயணித்ததாகக் கூறப்படுகிறது. ஏறக்குறைய அனைவரும் ராய்ச்சூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள். இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் (9 people died on the spot). இறந்தவர்களில் நான்கு பேர் ஆண்கள். இரண்டு குழந்தைகள் மற்றும் மூன்று பெண்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். படுகாயமடைந்த 11 பேர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றனர்.

பைக் மீது லாரி மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

பெல்லாரி: வேகமாக வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

3 members of same family killed :கர்நாடக மாநிலம் பெல்லாரியைச் சேர்ந்தவர் வீரேஷ். அவரது மனைவி அஞ்சலி. இவர்களது மகன் தினேஷ். இவர்கள் 3 பேர் உள்ளிட்ட 4 பேர் மோட்டார் சைக்கிளில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தனராம். கௌசல் பஜார் மேம்பால சாலையில் சென்று கொண்டிருந்தப்போது, பின்புறத்திலிருந்து வேகமாக வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதி உள்ளது. இதில் பலத்த காயமடைந்த வீரேஷ், அவரது மனைவி அஞ்சலி, மகன் தினேஷ் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காயமைடைந்த வீரேஷின் மற்றொரு மகன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுமதித்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கௌசல் பஜார் பகுதியில் அதிக அளவில் வாகன நெரிசல் ஏற்படுவதால், விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு ஒரு தீர்வை கண்டறிய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.