AIADMK Coordinator O. Panneer Selvam : போக்குவரத்து சேவை கட்டணங்களை உயர்த்தக் கூடாது : அதிமுக ஒருங்கிணைபாளர் ஓ.பன்னீர் செல்வம்

சென்னை: Transport service charges should not be increased : போக்குவரத்து சேவை கட்டணங்களை உயர்த்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணங்களை (Charges for transportation services) பல மடங்கு வரை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தி எறிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளது.

வாகன சோதனை மையங்களுக்கான அங்கீகாரம் அளிக்கும் கட்டணத்தை (Accreditation Fee for Vehicle Testing Centres) ரூ. 1 ஆயிரத்தில் இருந்து ரூ. 5 ஆயிரமாக, அதாவது 5 மடங்கு உயர்த்தவும், இந்த மையங்களின் அங்கீகாரத்தை புதுப்பித்தலுக்கான கட்டணத்தை ரூ. 500 இல் இருந்து ரூ. 3 ஆயிரமாக, அதாவது 6 மடங்கு உயர்த்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மையத்தை புதுப்பிப்பதற்கான தாமதக் கட்டணத்தை ரூ. 100 இல் இருந்து ரூ. 200 ஆக, அதாவது 2 மடங்கு உயர்த்தவும் போக்குவரத்து ஆணையரின் முடிவுக்கு (Transport Commissioner decision) எதிரான மேல் முறையீடு கட்டணத்தை ரூ. 100 வில் இருந்து ரூ. 500 ஆக, அதாவது 5 மடங்கு உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த விவகாரத்தில் முதல்வர் உடனடியாக தலையிட்டு போக்குவரத்து சேவைக் கட்டணங்களை உயர்த்தும் முடிவை தமிழக அரசு (Tamil Nadu Govt) கைவிட வேண்டும் என்று அந்த அறிக்கையில் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஓ.பன்னீர் செல்வம் உயர்நீதிமன்றத்தில் (High Court) தொடர்ந்த வழக்கில், அவரும், எடப்பாடி பழனிச்சாமியும், முன்பு இருந்ததைப் போல அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளராக தொடர வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து இதனைத் எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு போக்குவரத்து சேவை கட்டணங்களை உயர்த்தும் முடிவை அரசு எடுத்துள்ளதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஓ. பன்னீர் செல்வம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.