The gold price rise: தங்கத்தின் விலை உயர்வு : உங்கள் நகரத்தில் தங்கத்தின் விலையை சரிபார்க்கவும்

Gold price jump to highest rate: இந்தியாவில் ஒரு மாதத்தில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது (The price of gold has gone up). தங்கத்தின் விலை 0.2% உயர்ந்து, 10 கிராமுக்கு ரூ.51,000 ஆக உள்ளது. வெள்ளி 0.3% குறைந்து ஒரு கிலோவுக்கு ரூ.60,350 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளில், டாலர் குறியீட்டில் கூர்மையான பின்னடைவுக்குப் பிறகு வெள்ளியன்று தங்கம் கிட்டத்தட்ட 3% உயர்ந்தது. இருப்பினும், டாலர் குறியீட்டெண் மீண்டும் உயர்ந்ததால், இன்று உலகச் சந்தைகளில் புல்லியன் அவுன்ஸ் ஒன்றுக்கு 0.4% குறைந்து $1,672.99 ஆக இருந்தது. இன்று, இந்தியாவில் 22 மற்றும் 24 காரட் தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்வைக் கண்டது (The price of gold rose significantly).

இந்தியாவில் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.51,160 ஆகவும், 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.46,900 ஆகவும் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், பல முக்கிய இந்திய நகரங்களில் (In Indian cities) தங்கத்தின் விலையில் மாறுபாடுகள் காணப்படுகின்றன.

முக்கிய நகரங்களில் இன்று தங்கம் விலை-

22 காரட்/10கிராம், 24 காரட்/10கிராம் ஆகிய முக்கிய நகரங்களின் விலைகள்

டெல்லி – ரூ 47,050, ரூ 51,330

மும்பை – ரூ 47,010, ரூ 51,290

கொல்கத்தா – ரூ 46,900, ரூ 51,160

சென்னை – ரூ 47,750, ரூ 52,100

அகமதாபாத் – ரூ 46,950, ரூ 51,210

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை மாலை நிலவரப்படி ஒரு கிராம் ரூ.4,770 ஆகவும், ஒரு கிராம் ரூ.38,160 ஆகவும் இருந்தது. இன்று (திங்கட்கிழமை) 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.4,775 (The price of 22 carat jewelery Gold by Rs 5 to Rs 4,775 per gram )ஆகவும், சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.38,200 ஆகவும் உள்ளது.

கோவை, திருச்சி, வேலூரில் ஒரு கிராம் தங்கம் ரூ.4,775க்கு விற்பனையாகிறது (A gram of gold is selling at Rs 4,775 in Coimbatore, Trichy and Vellore). கடந்த வாரம் தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் இருந்தபோதிலும், விலை பெரிய அளவில் குறையவில்லை. கடந்த வாரம், கிராம் ரூ.4715-ல் துவங்கி, கிராமுக்கு ரூ.55 அதிகரித்து வர்த்தகம் முடிந்தது. இந்த வார தொடக்கத்திலேயே தங்கத்தின் விலை உயரத் தொடங்கியுள்ளது.